
ஜிமில் சேருவதற்கு சரியான வயது எது என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
சமீபகாலமாக பலரும் உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள ஜிம் செல்லத்துவங்கி விட்டார்கள்.
வயது வித்தியாசமின்றி, பாலின பாகுபாடின்றி அனைவரும் ஜிம் செல்கிறார்கள்.
பெற்றோர்களை பார்த்தும், அக்கம்பக்கத்தினரை பார்த்தும், பதின்வயது சிறுவர்களும் ஜிம் செல்ல துவங்கிவிட்டனர். அதில் ஒருசில பெற்றோருக்கு பெருமை வேறு.
தன்னுடைய டீன்ஏஜ் மகனோ, மகளோ, ஃபிட்டாக இருக்கிறார்கள் என்பதும், உடலை பேணுவதில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதும், பெற்றோர்களுக்கு பெருமை தரக்கூடிய விஷயமே.
நிபுணர்களின் கூற்றுப்படி, 20 வயது- 50 வயது வரை, யார் வேண்டுமானாலும் ஜிம்மிற்கு செல்லலாம். ஆனால், 13-14 வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு உடலில், தசை, எலும்புகள் வளரும் பருவம் அது.
சரி, அப்போது ஜிமிற்கு பதின்வயது சிறார்கள் செல்லலாமா? இந்த வயதில் ஜிமில் சேர்ந்தால் என்னவாகும்?
card 2
சிறு வயதில் ஜிம் செய்தால் என்ன நடக்கும்?
இளம் வயதில் ஜிமில் ஒர்க் அவுட் செய்வதால், அதிகம் வியர்க்கும். மூடிய அறையில், அதிகம் வியர்க்கும் போது, நோய் தொற்றுகள் ஏற்படும்.
அது பதின்வயதில் இருப்பவர்களை அதிகம் தாக்கும்.
அதீத ஒர்க் அவுட் செய்வதால் தசை வலி வர வாய்ப்பு உள்ளது.
அதேபோல, நீங்கள் ஜிம்மில் கார்டியோ அல்லது பவர் லிஃப்டிங் செய்தால், அது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
ஜிம்முக்கு செல்பவர்கள் விரைவாக உடலை கட்டமைக்க சில தேவையற்ற புரோட்டீன் ஷேக்குகள் மற்றும் ஸ்டீராய்டுகளை உட்கொள்கிறார்கள். இது எலும்புகளை வலுவிழக்கச் செய்யும்.
பதின்பருவத்தில் இருப்பவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, மைதானத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடலாம். அதோடு யோகாவும் செய்யலாம். மறக்காமல் உணவு கட்டுப்படும் அவசியமாக கடைபிடிக்க வேண்டும்.