Loading...
8 மணி நேரத் தூக்கம் தேவையில்லையா? ஒரு மனிதனுக்கு உண்மையிலேயே எவ்வளவு தூக்கம் தேவை? மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்
ஒரு மனிதனுக்கு உண்மையிலேயே எவ்வளவு தூக்கம் தேவை என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம்

8 மணி நேரத் தூக்கம் தேவையில்லையா? ஒரு மனிதனுக்கு உண்மையிலேயே எவ்வளவு தூக்கம் தேவை? மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 14, 2026
04:10 pm

செய்தி முன்னோட்டம்

ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்ற விதி பல காலங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், இக்கருத்து அனைவருக்கும் ஒரே மாதிரியாகப் பொருந்தாது என்றும், தூக்கத்தின் அளவை விட தூக்கத்தின் தரமே மிகவும் முக்கியமானது என்றும் புதிய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டில் வேலை, ஓய்வு மற்றும் தூக்கம் என நாளை மூன்றாகப் பிரித்த முறையிலிருந்தே இந்த 8 மணி நேர விதி உருவானது. இருப்பினும், பழங்குடியின மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களின் சராசரி தூக்கம் 5.7 முதல் 7.1 மணி நேரம் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வளவு நேரம்?

ஒரு மனிதனுக்கு உண்மையிலேயே எவ்வளவு நேரத் தூக்கம் தேவை?

அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே தூக்க அளவு என்று எதுவுமில்லை என பிரபல தூக்கவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக, பெரும்பாலான பெரியவர்களுக்கு இரவில் 7 முதல் 9 மணி நேரத் தூக்கம் போதுமானது.

சிலருக்கு சற்று குறைவான தூக்கமே போதுமானதாக இருக்கும் நிலையில், சிலருக்கு கூடுதல் நேரம் தேவைப்படலாம்.

அதேபோல, வயதானவர்களை விட இளைஞர்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுகிறது. தேவையான நேரத்தை விடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்குவது இதய நோய், பக்கவாதம் மற்றும் உடல் பருமன் போன்ற பாதிப்புகளுடன் தொடர்புடையதாக உள்ளது.

குறைந்த தூக்கம்

பணிபுரியும் தொழிலாளர்களின் தூக்கம் குறைவது ஏன்?

நீண்ட நேர வேலை, ஸ்மார்ட்போன் மற்றும் கணினி திரைகளை பார்ப்பது, மன அழுத்தம் மற்றும் காஃபின் பயன்பாடு ஆகியவை உடலின் இயற்கை சுழற்சியான பாதிக்கின்றன.

இந்தியாவில் பணிபுரியும் பல ஊழியர்கள் சராசரியாக 6 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகத் தரவுகள் கூறுகின்றன.

"வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகளுக்காகப் பலர் தூக்கத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வார இறுதியில் தூங்கிக் கொள்ளலாம் எனத் தவறாக நினைக்கிறார்கள்" என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ADVERTISEMENT

உடல்நல பாதிப்புகள்

தொடர் தூக்கமின்மையால் ஏற்படும் தீவிர உடல்நல பாதிப்புகள்

தொடர்ச்சியாக சரியாகத் தூங்காத போது கவனம் செலுத்துதல், நினைவாற்றல், ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் வேலைத்திறன் ஆகியவை பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.

மேலும், இது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களைப் பாதித்து, இன்சுலின் உணர்திறனைக் குறைக்கிறது.

இதனால் உடல் எடை அதிகரிப்பு, டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்றப் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

மன அழுத்தமும் பதற்றமும் இதனால் பல மடங்கு அதிகமாகின்றன.

ADVERTISEMENT

மருத்துவ ஆலோசனை

மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டிய முக்கியமான அறிகுறிகள்

அதிகப்படியான குரட்டை, தூக்கத்தில் மூச்சுத்திணறல், காலையில் ஏற்படும் தலைவலி, வாய் வறட்சி மற்றும் பகல் நேரத்தில் அதிகப்படியான சோர்வு போன்றவை சாதாரண மன அழுத்தத்தின் அறிகுறி மட்டுமல்ல.

இவை 'அடைப்பு தூக்க மூச்சுத்திணறல்' (Obstructive Sleep Apnea) அல்லது நாள்பட்ட தூக்கமின்மை நோயின் (Chronic Insomnia) அறிகுறிகளாக இருக்கலாம்.

இத்தகைய அறிகுறிகள் தொடர்ந்தால், அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியமாகும்.

ADVERTISEMENT