சர்வேதேச செவிலியர்கள் தினம்: இரவுபகலாக உழைக்கும் செவிலியர்களுக்கு உடல் சோர்வை நீக்க சில குறிப்புகள்
சுகாதார பாதுகாப்பின் முக்கியமான தூண்களாக விளங்குபவர்கள் மருத்துவர்கள். ஆனால், அவர்களுக்கு நிகராக கருதப்பட வேண்டியவர்கள் செவிலியர்கள். கொரோனா காலகட்டத்தில் 'Unsung Heros' என போற்றப்பட்டவர்கள் இவர்கள். உடல்நலம் குன்றியவர்களை கவனிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனர் செவிலியர்கள். இந்த சர்வதேச செவிலியர் தினத்தில், அவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்போம். அயராது நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதால், செவிலியர்கள் சோர்வாக நேரிடும். செவிலியர்கள் அந்த அயர்ச்சியை சமாளிக்கவும், தங்கள் ஆற்றலை ரீசார்ஜ் செய்யவும் சில உதவிக்குறிப்புகள் இங்கே: மன ஆரோக்கியத்திற்கு டிப்ஸ்: நோயாளியின் கவனிப்புக்கு அப்பாற்பட்ட செயல்களில் ஈடுபடுவது, உதரணமாக புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதால், மனதில் தன்னம்பிக்கை வளரும். வேலைக்கு செல்வதற்கு முன்னர் உற்சாகம் தரும் பாடல்களை கேட்கலாம், தன்னம்பிக்கை வளர்க்கும் பாட்காஸ்ட்களைக் கேட்கலாம்.
செவிலியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில குறிப்புகள்
உடல் ஆரோக்கியத்திற்கு டிப்ஸ்: உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க, தொடர் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். விறுவிறுப்பான நடை, நடனம், நீச்சல் அல்லது யோகா போன்றவற்றை முயற்சிக்கவும். இரவு தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். உணர்ச்சி நல்வாழ்வு: நர்சிங் செய்வதால் உங்கள் உணர்வுகள் பாதிப்படையலாம். எனவே அவற்றை வெளிப்படுத்த ஆரோக்கியமான வழிகளைக் கண்டுபிடிப்பது முக்கியம். வரைதல், சமைத்தல் அல்லது இசை வாசிப்பது போன்ற பொழுதுபோக்குகள் மூலம் உங்கள் உணர்வுகள் வெளிப்படட்டும்.தனிப்பட்ட நலன்: செவிலியர்களும், தனி சொந்தங்கள், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலையில் இருந்து ஓய்வு பெறுவதற்காக, நர்சிங் தாண்டி ஆர்வங்களை வளர்ப்பது முக்கியம். ஸெல்ப் கேர் மிகவும் அவசியம். உங்களுக்கு பிடித்தமாக ஹேர்கட், பெடிக்யூர் போன்றவற்றை செய்ய துவங்குங்கள்.