யோகா செய்யும் பொழுது காயங்கள் ஏற்படுகிறதா? அதை தடுக்க இதோ சில வழிகள்
செய்தி முன்னோட்டம்
உடற்பயிற்சி என்று வரும்போது உடல் வலி அல்லது காயங்கள் ஏற்படுவது வழக்கம். இது நீங்கள் முறையாக பயிற்சி செய்வதை தடுக்கலாம். வொர்க் அவுட் மட்டுமல்ல யோகா செய்யும் பொழுது கூட காயங்கள் ஏற்படலாம். அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை காண்போம்.
உங்கள் வரம்புகளை அறிவது: யோகா செய்யும் போது, மற்றவரோடு நம்மை ஒப்பிட்டு பார்ப்பது சாதாரணமானது. ஆனால் மற்றவர்கள் செய்கிறார்கள் என்று நம் உடல் வலிமைக்கு அப்பாற்பட்ட ஆசனங்களை செய்வது, உங்களுக்கு காயங்களை ஏற்படுத்தும்.
ஆசிரியரின் உதவியை பயன்படுத்தி கொள்ளுங்கள்: சில யோகா ஆசனங்கள் சிக்கலானவை மற்றும் முயற்சி செய்வது கடினம். நம்மில் பெரும்பாலோர் அவற்றை தவறாகப் புரிந்து கொண்டு செய்வதால் காயங்கள் ஏற்படலாம். அதனால் யோகா ஆசிரியரின் வழிக்காட்டுதளுடன் செய்வது நன்று.
Yoga injuries
மெதுவாகவும் சீராகவும் யோகா செய்வது காயங்கள் ஏற்படும் வாய்ப்புகளையும் கணிசமாகக் குறைக்கின்றன
மூச்சு பயிற்சி அதிகம் செய்வது காயங்களை ஏற்படுத்தாது: மூச்சுப்பயிற்சி என்பது யோகாவின் மிக முக்கியமான பகுதியாகும், ஆசனங்களைச் செய்யும்போது சரியாக முயற்சி செய்ய நீங்கள் மறந்துவிடலாம். இதனால் மூச்சுத் திணறல், சோர்வு அல்லது தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் நீங்கள் சரியாக சுவாசிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
இடைவெளி எடுத்து கொள்ள வேண்டும்: வொர்க்அவுட்டைப் போலவே யோகாசனம் செய்யும் பொழுது இடையில் இடைவெளி எடுத்து, சிறிது தண்ணீர் பருகுவது முக்கியம். சில ஆசனங்களுக்குப் பிறகு உங்கள் உடலை ஓய்வெடுக்க அனுமதியுங்கள். தசைகளை தளர்த்தவும், உடல் அழுத்தத்தைப் போக்கவும், போதுமான அளவு ஓய்வெடுக்க வேண்டும்.