சோலோ ட்ரிப் போவதற்கு, இந்தியாவில் பாதுகாப்பான இடங்கள் என்னென்ன?
செய்தி முன்னோட்டம்
இக்கால இளைஞர்கள் மட்டுமின்றி, வயதானவர்கள் கூட தனியாகவே சுற்றுலா செல்ல விருப்புகிறார்கள்.
உலகின் பல இடங்களையும் அதன் பாரம்பரியத்தையும் கண்டுகளிக்கவும், 'மீ டைம்'-ஐ (Me Time) அனுபவிக்கவும், தன்னை பற்றிய புரிதலை உணரவும், இந்த சோலோ ட்ரிப் உதவுகிறது.
எனினும் இந்தியாவில் இது போன்ற சோலோ ட்ரிப் செல்ல பாதுகாப்பான இடங்கள் உண்டா? இருக்கிறது..இதோ அதற்கான பட்டியல்.
புதுச்சேரி/பாண்டி/ பாண்டிச்சேரி: இப்படி பல மாதிரி அழைக்கப்படும் பாண்டிச்சேரி, நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாக இருந்து வருகிறது.
பிரஞ்சு கலாச்சாரம், அமைதியான சூழல், அழகான தேவாலயங்கள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவற்றுடன் ஒரு இனிமையான பயண அனுபவத்தை பெறலாம்.
card 2
சோலோ ட்ரிப் செல்ல சில இடங்கள்
வர்கலா: வர்கலா, கேரளாவில் உள்ள ஒரு கடற்கரை நகரமாகும். இங்கே அரபி கடலை நோக்கியபடி ஒரு அழகிய குன்றும் அமைந்துள்ளது. திரைப்பட ஷூட்டிங்குகள், போட்டோ ஷூட்கள் எடுக்க சிறந்த இடம். அங்கிருக்கும் ஹோட்டல்களில், ஆயுர்வேத ஸ்பா, மசாஜ் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
ஷில்லாங்: மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் , பைன் மரங்களால் சூழப்பட்ட ஒரு அழகான நகரம். வசீகரமான இயற்கைக்காட்சி, அவ்வப்போது பெய்யும் சாரல் மழை மற்றும் மென்மையான குளிர்ந்த காற்று இந்த மலை வாசஸ்தலத்திற்கு அழகை கூட்டுகிறது. "கிழக்கின் ஸ்காட்லாந்து" என்பது இந்த இடத்திற்கு மற்றொரு பெயர்.தர்மசாலா: இந்தியாவில் மிகவும் அமைதியான இடங்களில் ஒன்று தர்மசாலா. ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள இந்த மலை நகரம், நாட்டின் மிகப்பெரிய திபெத்திய சமூகத்தின் தாயகமாகும்.