NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / முடி வளர்ச்சிக்கு தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவுகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    முடி வளர்ச்சிக்கு தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவுகள் 
    முடி வளர்ச்சிக்கு தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவுகள்

    முடி வளர்ச்சிக்கு தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவுகள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 29, 2023
    06:11 am

    செய்தி முன்னோட்டம்

    ஒரு நபரின் வாழ்க்கை முறை மற்றும் மரபியல் உள்ளிட்ட பல காரணிகள், அவரது சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    குறிப்பாக இது முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    எனினும் நமது இந்திய நாட்டின் பாரம்பரிய மூலிகைகள் மற்றும் மருத்துவ தாவரங்கள் பலவும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முடிக்கு ஊட்டச்சத்து மற்றும் வலுவான, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க பயன்படுத்தப்படுகிறது.

    இந்த சக்திவாய்ந்த மூலிகைகளை உங்கள் தினசரி முடி பராமரிப்பு வழக்கத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம் , நீங்கள் நீண்ட, ஆரோகியமான கூந்தலை பெறலாம்.

    card 2

    ரோஸ்மேரி

    ரோஸ்மேரியின் மரத்தாலான நறுமணம், கவர்ந்திழுப்பது மட்டுமல்லாமல், இது ஒரு சிறந்த முடி வளர்ச்சி ஊக்குவிப்பாகவும் இருக்கிறது.

    இந்த மூலிகை, உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் முடியின் வேர்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது.

    இது தவிர, இதில் உர்சோலிக் அமிலம் உள்ளது.

    இது முடி உதிர்தலை நிறுத்தும் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். ரோஸ்மேரி, முடி உதிர்தலை தவிர்க்கும் இயற்கை தீர்வாகும்.

    card 3

    வேம்பு

    பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட வேம்பு, அதன் குறிப்பிடத்தக்க பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்களுக்காக அறியப்படுகிறது.

    அதனால்தான் இது பல முடி பராமரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

    உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் அதன் திறன், சுத்தமான, ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிப்பதற்கு பங்களிக்கிறது.

    இது முடி வளர்ச்சிக்கு சிறந்த ஆரோகியத்தை தருகிறது.

    வேம்பு, உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி உதிர்வதை குறைக்கிறது.

    card 4

    முருங்கை 

    வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஈ, இரும்பு, துத்தநாகம் மற்றும் அமினோ அமிலங்கள் முருங்கை இலைகளில் காணப்படும் பல ஊட்டச்சத்துக்களில் சில.

    இந்த ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

    மயிர்க்கால்களை வலுப்படுத்துகின்றன மற்றும் முடி உடைவதைக் குறைக்கின்றன.

    முருங்கை கீரையின் ஈரப்பதமூட்டும் குணங்கள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது, முடி வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலையையும் உருவாக்குகிறது.

    card 5

    சீகைக்காய்

    இந்த ஆயுர்வேத மூலிகையின் மருத்துவ குணங்கள், ரசாயன ஷாம்பு தயாரிப்புகளுக்கு பிரபலமான மாற்றாக கருதப்படுகிறது.

    விஞ்ஞான ரீதியாக "அக்காசியா கன்சின்னா" என்று குறிப்பிடப்படும் சீகைக்காய், இந்தியா முழுவதும் பரவலாகக் கிடைக்கிறது.

    முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அத்தியாவசிய வைட்டமின்களான ஏ, கே மற்றும் ஈ ஆகியவற்றில் நிறைந்துள்ளது.

    இது முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமான பொடுகை குறைக்கிறது மற்றும் நிர்வகிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முடி பராமரிப்பு
    ஆரோக்கியமான உணவு
    ஆரோக்கிய குறிப்புகள்
    ஆரோக்கியமான உணவுகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    முடி பராமரிப்பு

    அதிகப்படியான முடி உதிர்விற்கு காரணமாகும் 5 உணவு வகைகள் ஆரோக்கியம்
    முடி மாற்று அறுவை சிகிச்சையின் வகைகள் என்ன? அவற்றின் அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய சிறு தொகுப்பு மருத்துவ ஆராய்ச்சி
    அடிக்கடி ஷாம்பு உபயோகிப்பீர்களா? இந்த 4 பொருட்கள் உங்கள் ஷாம்பூவில் இல்லையென உறுதி செய்துகொள்ளுங்கள்! ஆரோக்கியம்
    இன்று சர்வதேச விக் நாள்: இந்நாளின் வரலாறும், சில சுவாரஸ்ய தகவல்களும் உடல் ஆரோக்கியம்

    ஆரோக்கியமான உணவு

    மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா? ஆரோக்கியம்
    குளிர்காலத்தில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை தக்கவைக்க உதவும் 5 மூலிகைகள் ஆரோக்கியமான உணவுகள்
    வீகன் டயட் உணவு முறைகளால் கிடைக்கும் நன்மைகள் ஆரோக்கியமான உணவுகள்
    குளிர்க் காலங்களில் சூப்கள் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குளிர்கால பராமரிப்பு

    ஆரோக்கிய குறிப்புகள்

    உங்கள் ஆரோக்கியத்தின் ட்ரைலர் உங்கள் நாக்கில் இருக்கிறது, தெரியுமா? ஆரோக்கியம்
    சரும பிரச்சனைனைகளுக்கு 'சர்வரோக நிவாரணி' மருதாணி ஆரோக்கியம்
    வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்? ரத்தகுழாய் சுருங்கும் அபாயம் உள்ளதாம், உஷார்! ஆரோக்கியம்
    உடலில் ஏற்பட்டுள்ள கால்சியம் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள் ஆரோக்கியம்

    ஆரோக்கியமான உணவுகள்

    உடல் எடையை எளிதில் குறைக்க உதவும் 'அன்னாச்சிப் பழ டயட்' ஆரோக்கியம்
    இதய ஆரோக்கியம் முதல் கர்ப்பிணிகள் வரை: ஜவ்வரிசியில் உள்ள நன்மைகள் ஆரோக்கியமான உணவு
    உடல் ஆரோக்கியம்: மறதியை தூண்டக்கூடிய சில உணவுகள் ஆரோக்கியம்
    வீகன் டயட்டில் இருக்கிறீர்களா?அதை பற்றி இருக்கும் சந்தேகங்களை அலசுவோம் உணவு குறிப்புகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025