பித்தப்பையில் கல் உருவாக காரணமாகும் முக்கிய காரணிகள் இவைதான்
உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று பித்தப்பை. இதன் சீரான செயல்பாடே, உடலின் மற்ற உறுப்புகளின் இயக்கத்திற்கு அடிநாதமாக அமைகிறது. இதில் சுரக்கும் பித்தநீர், உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. இதிலிருந்து உருவாகும் பித்தநீர் உடலில் பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யக்கூடியது. இந்த முக்கிய உறுப்பில் கற்கள் உருவாக கூடும். அதை கவனிக்காமல் விட்டுவிட்டால், உயிருக்கே ஆபத்தாக முடியலாம். இது சார்ந்த பல சம்பவங்களை சமீபத்தில் கேட்டிருப்பீர்கள். இந்த கற்கள் உருவாக காரணம், நீங்கள் அன்றாடம் உங்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய சில தவறுகள் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை என்ன? அவற்றை எப்படி நிவர்த்தி செய்வது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
அதிக கார்போ, இனிப்பு சேர்த்த உணவுகளை உட்கொள்வது, நாளடைவில் பித்தப்பையில் கற்களை உருவாக்கக்கூடும். அதிக சர்க்கரை, நீரழிவு நோயாளிகளுக்கும் ஆபத்தை உருவாக்கும். அதேபோல, கார்போஹைட்ரெட்ஸ் அதிகம் இருக்கும் உணவுகள், செரிக்கும் சர்க்கரையாக மாறுவதால், அதையும் எடுத்துக்கொள்வதை குறைப்பது நல்லது. போதிய அளவு புரதம், மினரல்கள், வைட்டமின்கள் கிடைக்காத போது பித்தப்பையில் கற்கள் உண்டாகின்றன. அதனால், தினசரி உங்கள் உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்துக்கொள்வது நல்லது. உடலை எப்போது சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள், ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை பார்ப்பவர்கள், தங்கள் உடல் செயல்பாடுகளை அதிகரிக்க தினசரி உடற்பயிற்சி கட்டாயம் செய்யவேண்டும். தனி மனித ஒழுக்கம் மற்றும் சுகாதாரம் அனைத்தையும் விட மிகவும் முக்கியம்.