NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ஷேவிங் செய்யும்போது ஏற்படும்  வெட்டு காயங்களுக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்
    ஷேவிங் செய்யும்போது ஏற்படும்  வெட்டு காயங்களுக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்
    வாழ்க்கை

    ஷேவிங் செய்யும்போது ஏற்படும்  வெட்டு காயங்களுக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 01, 2023 | 05:24 pm 0 நிமிட வாசிப்பு
    ஷேவிங் செய்யும்போது ஏற்படும்  வெட்டு காயங்களுக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்
    வெட்டு காயங்களுக்கு உதவும் சில வீட்டு வைத்தியங்கள்

    தேவையற்ற முடிகளை அகற்றுவதற்கான வேகமான மற்றும் எளிதான வழிகளில் ஒன்று, ஷேவிங் செய்வது. ஆனால், அப்போது பயன்படுத்தப்படும் ஷேவிங் ரேஸரினால், அவ்வப்போது வெட்டுக்காயங்கள் ஏற்படுவதுண்டு. அது தீக்காயங்கள் போல எரிச்சலையும், வீக்கத்தையும் உண்டாக்கிவிடும். தோலின் மேற்பரப்பில், வீக்கமடைந்த, சிவப்பு திட்டுகள் ஏற்படும். உங்கள் தாடை, கைகள், கால்கள் மற்றும் அக்குள்களை ஷேவ் செய்யும் போது, இது போன்ற வெட்டுகள் ஏற்படலாம். இது போன்ற எரிச்சல்களில் இருந்து, சருமத்தை காத்திடவும், வெட்டுக்காயங்கள் மூலம் ஏற்படும் வடுவைத் தடுக்கவும், பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. கற்றாழை: பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிரம்பிய கற்றாழை, காயங்கள், வெட்டுக்கள் மற்றும் எரிச்சல்களை ஆற்றவும், குணப்படுத்தவும் உதவுகிறது.

    வெப்பம் மற்றும் வலியை நீக்கும் பேக்கிங் சோடா

    பேக்கிங் சோடா பேஸ்ட்: இது, வெட்டப்பட்ட இடத்தில் தடவ, குளிர்ச்சியை தருகிறது. அதோடு, கைகள், கால்கள் மற்றும் அக்குள்களில் ஏற்பட்ட வெட்டுக்களை ஆற்றும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்: பலவிதமான சரும பிரச்சனைகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு. எந்த வகையான சொறி, எரிச்சல் மற்றும் தழும்புகளுக்கும் சிறந்த தீர்வாகும். தேங்காய் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகள், வெட்டு காயங்களுடன் தொடர்புடைய வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது. அதோடு, அந்த காயங்களை விரைவாக குணப்படுத்துகிறது. குளிர்விக்கப்பட்ட டீ பேக்ஸ்: தேயிலை இலைகளில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை, அனைத்து வகையான தோல் எரிச்சல்களுக்கும் உதவுகின்றன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    வீட்டு வைத்தியம்
    சரும பராமரிப்பு
    சரும பராமரிப்பு குறிப்புகள்

    வீட்டு வைத்தியம்

    வாய்வு மற்றும் வயிறு உப்புசம் ஆகியவற்றை தவிர்க்க எளிய வீட்டு வைத்தியங்கள்  ஆரோக்கியம்
    இன்று சர்வதேச மலேரியா தினம் 2023: மலேரியாவுக்கு 5 பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் மலேரியா
    வாஸ்து நம்பிக்கை உள்ளவர்களா? இந்த செடிகளை, ஒருபோதும் வீட்டிற்குள் வளர்க்காதீர்கள் வாழ்க்கை
    விக்கலில் இருந்து விடுபட உதவும் வீட்டு வைத்தியங்கள் ஆரோக்கியம்

    சரும பராமரிப்பு

    வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் சன்ஸ்கிரீனாக பயன்படும் சில இயற்கை பொருட்கள் சரும பராமரிப்பு குறிப்புகள்
    கோடைகால சரும பராமரிப்பு குறிப்புகள்: நீங்கள் இதுவரை அதிகம் கண்டுகொள்ளாத சில தவறுகள் சரும பராமரிப்பு குறிப்புகள்
    பருக்களின் வீக்கத்தால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்காக சில வீட்டு குறிப்புகள் சரும பராமரிப்பு குறிப்புகள்
    புதிய டாட்டூ குத்தியபின்பு, நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில பராமரிப்பு குறிப்புகள் சரும பராமரிப்பு குறிப்புகள்

    சரும பராமரிப்பு குறிப்புகள்

    மேக்அப் பிரியர்களே, நீங்கள் செய்யக்கூடிய சில தவறுகள், உங்கள் சருமத்தை பாதிக்கலாம்! சரும பராமரிப்பு
    சரும பாதுகாப்பு: மிருதுவான சருமத்திற்கும், இளமையான தோற்றத்திற்கும் உதவும் பூக்கள் சரும பராமரிப்பு
    டால்கம் பவுடரை இதற்கும் பயன்படுத்தலாம்! வல்லுநர்கள் கூறும் சில பயன்பாடுகள் அழகு குறிப்புகள்
    குளிர் காலத்தில், வறட்சியாகும் சருமத்தை பாதுகாக்க எளிமையான வீட்டு வைத்தியம்! சரும பராமரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023