இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை தூக்கி எரிந்து விடாதீர்கள்! அவை ஆரோக்கியத்திற்கான தங்க சுரங்கங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை சீவி உண்பது ஆரோக்கியமான பழக்கம்தான். ஆனால், அந்த தோல்களில் காணப்படும் ஊட்டச்சத்துக்களை நாம் கவனிக்காமல், குப்பை என எண்ணி தூர எரிந்து விடுகிறோம். சில தோல்கள் செரிமானத்திற்கு ஏற்றவை அல்லாமல் இருக்கலாம். மற்றவை உண்ணக்கூடியவை மற்றும் சத்தானவை. அந்த வகையில் ஆரோக்கியமான தோல்களை கொண்ட சில பழங்கள் மற்றும் காய்கறிகளை பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.
பழங்களின் தோல்களும் அதன் ஆரோக்கிய பண்புகளும்
மாங்காய்: மாங்காய்/ மாம்பழத் தோல்கள், பார்ப்பதற்கு கடினமானதாகத் தோன்றினாலும், கரோட்டினாய்டுகள், பாலிபினால்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களையும் அதனுடன் கொண்டுள்ளது. பச்சையாக சாப்பிடுவது சிலருக்கு சவாலாக இருந்தாலும், அதனை சமைத்தும் உண்ணலாம். குழம்பு, பச்சடி, ஊறுகாய் என அதனை பக்குவமாக சமைப்பதால், மாங்காயின் தோல் மென்மையாக்குகிறது மற்றும் அதை சுவையாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் ஆக்குகிறது. கிவி: சமீபத்திய ஆய்வுகள் கிவியின் சதையை மட்டும் சாப்பிடுவதை விட தோலையும் உட்கொள்வதனால், நார்ச்சத்து மூன்று மடங்கு அதிகரிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. கிவி பழத்தில் கணிசமான நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது. கொய்யா: கொய்யா தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன.
காய்கறிகளின் தோல்களும் அதன் ஆரோக்கிய பண்புகளும்
உருளைக்கிழங்கு: பொதுவாக சீவி, தூக்கி எறியப்படும் உருளைக்கிழங்கு தோல்கள், உண்மையில், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களின் சுரங்கமாகும். அவற்றை நீக்குவதால், மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். சுவை மற்றும் அமைப்பு இரண்டையும் அதிகரிக்க வறுத்த உருளைக்கிழங்கு அல்லது உருளைக்கிழங்கு சாலட் தயாரிக்கும் போது தோலை நீக்காமல் சமைக்கவும். கேரட்: கேரட், அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்குப் பெயர்பெற்றது. இந்த காய்கறி, சதை மற்றும் தோலுக்கு இடையில் ஊட்டச்சத்துக்களை சமமாக விநியோகிக்கும். இருப்பினும், பைட்டோநியூட்ரியன்கள் தோலில் அதிக செறிவூட்டப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. குழம்புகளுக்கு, நன்றாக கழுவினால் போதுமானது. ஆனால் வறுக்கும்போது, கசப்பைத் தவி ர்க்க, தோலுரித்தல் அவசியமானது.