காற்று மாசுபாட்டிலிருந்து நுரையீரலைப் பாதுகாக்க சில உணவுக் குறிப்புகள்
செய்தி முன்னோட்டம்
கடந்த வாரத்தில் தொடங்கிய நவராத்திரி விழாவினை தொடர்ந்து, இதோ அடுத்த வாரம், தீபாவளி பண்டிகை வரவுள்ளது. ஊரெல்லாம் வெடி, பட்டாசு என கொண்டாட்டமாக இருக்கும்.
தொடர்ந்து, டிசம்பர் மாதம் கார்த்திகை திருவிழாவும் நடைபெறும். இப்படி வரிசையாக பட்டாசு வெடித்து கொண்டாடபடவுள்ள இந்த திருவிழாக்களில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த வெடிகளாலும், அதிகரித்து வரும் வாகன புகையினாலும் காற்று மாசடைகிறது என்பது மறுப்பதற்கில்லை.
தலைநகர் டெல்லியில், காற்று மாசின் அளவு, அபாயகரத்தை தண்டியுள்ளதாக சமீபத்திய அறிக்கை குறிப்பிட்டது.
அதிக காற்று மாசு, நம்மை கண்டிப்பாக நோய்வாய்படுத்தும்.
இந்த காற்று மாசுபாட்டிலிருந்து உங்கள் நுரையீரலைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் சில உணவுக் குறிப்புகள் இங்கே உள்ளன.
card 2
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பிய உணவுகளை உண்ணுங்கள்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்களை நன்றாக சுவாசிக்க உதவுகின்றன. அதனால் இந்த பருவத்தில் அவற்றை அதிகரிப்பது நல்லது.
அவை, காற்று மாசுபாட்டால் உங்கள் நுரையீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன .
மஞ்சள், கீரை, பீட்ரூட், பெர்ரி, ஆப்பிள், தக்காளி, பச்சை காய்கறிகள், ஆரஞ்சு மற்றும் கொட்டைகள் ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக இருப்பதால் அவற்றை நிறைய சாப்பிடுங்கள். கூடவே கிரீன் டீயையும் பருகலாம்.
card 3
பால் பொருட்களின் உட்கொள்ளலை குறைக்கவும்
நீங்கள் சுவாசிப்பது நச்சுக் காற்றாக இருக்கும்போது, பால் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இது பலருக்கு சுவாச சிக்கலை ஏற்படுத்தும்.
ஒவ்வாமை மற்றும் கிளினிக்கல் இம்யூனாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வது சளியின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்துமாவை மோசமாக்கும் என்று தெரியவந்துள்ளது.
எனவே, பால் பொருட்களை குறைக்க அல்லது தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
card 4
ஒமேகா-3 அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அவற்றின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு அறியப்படுகின்றன.
அவை நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காகவும் அறியப்படுகிறது.
அவை உங்கள் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களை செயல்படுத்துவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
வால்நட்ஸ், ஆளிவிதை, சியா விதைகள், கீரை, சோயாபீன்ஸ் மற்றும் முளைகள் ஆகியவற்றை உங்கள் நுரையீரல் சக்தியை அதிகரிக்க, தினமும் உட்கொள்ளுங்கள்.