50 வயதிலும், பிட்டாக இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் ரகசியம் தெரியுமா?
'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கிரிக்கெட் உலகம் மட்டுமின்றி, பல பிரபலங்கள் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவர் 50 வயதை எட்டும் இந்த வேளையில், அவரின் பிட்னெஸ் ரகசியம் தற்போது வெளியாகி உள்ளது. டெடிகேஷன்: கிரிக்கெட் விளையாட்டின் மீது அவருக்கு இருந்த டெடிகேஷன், எந்த ஒரு செயலை செய்தாலும், அதன் விளைவுகள் பற்றி கவலைப்படாமல், முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. உடற்பயிற்சி: தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஸ்ட்ரெட்சிங், வெயிட்ஸ் மற்றும் யோகா அல்லது ஏதேதும் விளையாட்டு விளையாடுவதை தவறாமல் கடைபிடிக்கிறார்.
பொறித்த உணவுகளை தவிர்க்கும் சச்சின் டெண்டுல்கர்
ஜிம்: ஜிம் பயிற்சியில், டம்பெல், ஸ்குவாட்ஸ், லெக் பிரஸ், சைடு லெக் ரைஸ் போன்ற பயிற்சிகளை தினசரி கட்டாயம் செய்கிறார் சச்சின். உணவு பழக்கம்: சச்சின் டெண்டுல்கர் பெரும்பாலும், அவித்த உணவுகள், வேக வைத்த காய்கறிகளை விரும்பி உண்கிறார். பொறித்த உணவுகளை தவிர்க்கிறார். புதியதை கற்றுக்கொள்ளுதல்: என்றும் ஒரு துறையில் நீடித்து இருக்க, கற்றுக்கொள்ளுதலை நிறுத்த கூடாது. அதேபோல, சச்சினும் புதிய விஷயங்களை கற்று கொள்ள தயங்குவதில்லை. விடுமுறை: எப்போதேனும் தான் ஃபார்மில் இல்லை என்பதை உணர்தல், உடனே ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு, மீண்டு வருகிறார். இதை எல்லாம் கடைபிடித்தால், நீங்களும், உங்கள் துறையில் சச்சின் போல ஜொலிக்கலாம்.