ஃபேன்டா, கோக், பெப்சி, ஐஸ் டீ, சூயிங் கம் - அஸ்பார்டேம் உணவு சோதனையில் சிக்கிய உங்கள் ஃபேவரைட் உணவுகள்
'சர்க்கரை உடல்நலத்திற்கு கேடு' என்ற மருத்துவர்களின் அறைகூவலுக்கு மாற்றாக கருதப்பட்டது தான் இந்த அஸ்பார்டேம் என்றழைக்கப்படும் செயற்கை இனிப்பு சுவை தரும் கெமிக்கல். ஆனால் தற்போது அந்த செயற்கை ரசாயனம், புற்றுநோய் உண்டாக்கக்கூடிய ஆபத்துகள் நிறைந்தவை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. "சரி, அது அந்த செயற்கை சர்க்கரையை சுவைப்பவர்களுக்கு தானே, நமக்கு இல்லை!" என நீங்கள் நினைத்தால், அது தவறு. ஆம், நீங்கள் அநேக நாட்களில் கொறிக்கும் பல நொறுக்கு தின்பண்டங்களில் இந்த ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. ஃபாண்டா, 7அப், பெப்சி, டயட் கோக், லிப்டன் டயட் ஐஸ் டீ, ஹேப்பிடென்ட் வேவ், மென்டோஸ் சூயிங் கம் என பல பிரபலமான உணவுகளில் இந்த ரசாயன கலவை, இனிப்பு சுவைக்காக கலக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?
சென்ற மாதத்தில், இந்த செயற்கை இனிப்பு ராசையானத்தில், புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்து உள்ளது என உலக சுகாதார அமைப்பு (WHO) செய்தி வெளியிட்டதும், உலகம் அதிர்ச்சி அடைந்தது. அதற்கு காரணம், உலகம் முழுவதும் செயற்கை இனிப்பு பானங்கள், சர்க்கரை இல்லாத ஜெலட்டின் பொருட்கள் மற்றும் candies உட்பட 6,000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில், அஸ்பார்டேம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சில தயாரிப்புகளில் எச்சரிக்கை வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. எனினும், அவை அஸ்பார்டேமுக்கு எதிரான குறிப்பான எச்சரிக்கை வாசகங்கள் அல்ல. மாறாக 'குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் தயாரிப்பை உட்கொள்ளக்கூடாது' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அஸ்பார்டேம் முதன்முதலில் 1981 இல் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அங்கீகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.