நீண்ட கால மன ஆரோக்கியத்திற்கு உதவும் சில எளிமையான வழிமுறைகள் பற்றி நிபுணர்கள் கருத்து
மன ஆரோக்கியம் என்பது, உடல் ஆரோக்கியத்தை போன்றே முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் சமீப காலங்களில் பலரும் பேசி வருகின்றனர். குடும்பம், வேலை, படிக்கும் இடங்களில் ஏற்படும் மன அழுத்தம், நண்பர்கள், சுற்றுசூழல் என உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்க பல காரணிகள் இருக்கலாம். ஆனால், அதிலிருந்து உங்களை காக்க, சில எளிய பழவழக்கங்களை கடைபிடித்தாலே போதுமானது என நிபுணர்கள் கூறுகின்றனர். அவற்றை தினசரி கடைபிடித்தாலே, நீங்கள் மன ஆரோக்கியத்தை பெறலாம். உடற்பயிற்சி: வாரத்திற்கு 3 முறை, குறைந்தது 35 நிமிடங்கள், மிதமான கார்டியோ ஒர்க் அவுட் செய்யவேண்டும். அது உடலில் இருக்கும் தேவையற்ற டாக்சின்ஸ்களை வெளியேற்ற உதவுகிறது. தீவிர உடற்பயிற்சி செய்வதால், மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்களும் நீங்கி, மனது ஒருநிலைப்படுகிறது
தினசரி ஆழ்ந்த உறக்கம் அவசியம்
நல்ல தூக்கம்: தினசரி ஆழ்ந்த தூக்கம் அவசியம். குறைந்தது 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும். நேரடி சூரிய ஒளி பெறுதல்: தினசரி காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் சூரிய ஒளி படுவது அவசியம். சூரிய ஒளியின் மூலம் கிடைக்கப்பெறும் வைட்டமின் சத்து, உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியம். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்தல்: தினமும் 15 நிமிடங்கள், உங்கள் தினசரி நிகழ்வுகளை, ஒரு டைரியில் எழுதுங்கள். இதன் மூலம் உங்கள் எண்ணங்களுக்கு வடிகாலாக அது அமையும். அதனால், மனதில் தேவையற்ற குழப்பங்கள் நீங்கி, ஒரு தெளிவு பிறக்கும். தியானம்: ஒரு நாளைக்கு, இரண்டு முறை, குறைந்தது 20 நிமிடங்கள், தியான பயிற்சியில் ஈடுபடுங்கள்.