NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / தூக்கம் பற்றிய விழிப்புணர்வு வாரம் 2023: தூக்கத்தை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகள்
    வாழ்க்கை

    தூக்கம் பற்றிய விழிப்புணர்வு வாரம் 2023: தூக்கத்தை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகள்

    தூக்கம் பற்றிய விழிப்புணர்வு வாரம் 2023: தூக்கத்தை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகள்
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 14, 2023, 01:00 pm 1 நிமிட வாசிப்பு
    தூக்கம் பற்றிய விழிப்புணர்வு வாரம் 2023: தூக்கத்தை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகள்
    தூக்கத்தை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளை களைவோம்

    இந்த வேகமான உலகில், பெரும்பாலோர் ஒர்க்-லைஃப் பேலன்சை சமன் செய்யமுடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது. அப்படி பதட்ட நிலையில் இருப்பவர்களால், சரியான நேரத்தில், சரியான அளவு உறக்கத்தை பெற முடிவதில்லை. அது அவர்களின் உடல்நிலையையும், வாழ்க்கையையும் பாதிக்கிறது. அமெரிக்காவில், இந்த வாரம், மார்ச் 12 துவங்கி, தூக்க விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், இந்த தூக்கத்தை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளை பற்றி காண்போம். கட்டுக்கதை: 5 அல்லது அதற்கும் குறைவான மணிநேர தூக்கம் போதும்: அது தவறு. உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள், ஒரு நபர் தினமும் 7 -9 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அதை விட குறைவாகவோ, அதிகமாகவோ தூங்குவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்

    உறங்கும் போதும் மூளை சுறுசுறுப்பாகவே இயங்கும்

    கட்டுக்கதை: தூக்கத்தின் தரத்தை விட அதன் அளவே முக்கியம்: தூக்கத்தின் காலம் முக்கியமானது என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தூக்கத்தின் தரமும் முக்கியமானது. தூக்க சுழற்சிகளுக்கு இடையில் எழுந்திருப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. கட்டுக்கதை: நீங்கள் எப்போது தூங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல: ஆய்வுகளின்படி, நீங்கள் உறங்க செல்லும் நேரத்திற்கு ஏற்ப, இயற்கையாகவே உடலின் தூக்கம்-விழிப்பு சுழற்சியை நிர்வகிக்கிறது. அந்த சுழற்சி மாறிக்கொண்டே இருந்தால், ​​அது உங்கள் வளர்சிதை, மன ஆரோக்கியம் மற்றும் இருதய செயல்பாடு ஆகியவற்றை நாளடைவில் பாதிக்கும். கட்டுக்கதை: தூங்கும்போது நமது மூளை செயலிழந்துவிடும்: அது உண்மையாக இருந்திருந்தால், நீங்கள் எப்போதோ இறந்திருக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கூட நமது மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தூக்கம்
    ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம்

    தூக்கம்

    ஒரு இரவு தூக்கம் இல்லாமல் இருந்தால், உங்கள் மூளை இரண்டு வருடங்கள் வயதாகிவிடும்; அதிர்ச்சி தகவல் ஆரோக்கியம்
    வைரல் செய்தி: ஒரு இங்கிலாந்து பெண், ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்குகிறார்; காரணம் தெரியுமா? ஆரோக்கியம்
    வாரத்தின் முதல் நாளை உற்சாகமாய் துவங்க சில டிப்ஸ்! மன அழுத்தம்
    அவ்வப்போது 'சுயநல' உணர்வு தலைதூக்குகிறதா? தவறேதுமில்லை ஆரோக்கியம்

    ஆரோக்கியம்

    சர்வதேச தினை ஆண்டு! 5 வகையான திணைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் உணவு குறிப்புகள்
    உடல் பருமனாக இருப்பவர்கள், கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில பழச்சாறுகள் உடல் ஆரோக்கியம்
    பிரசவத்திற்குபின் பெண்களின் ஆரோக்கியம்: தோல், முடி மற்றும் உடலை பராமரிக்க சில குறிப்புகள் பெண்கள் ஆரோக்கியம்
    வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் உடலில் ஏற்படும் நன்மைகளின் பட்டியல் உணவு குறிப்புகள்

    உடல் ஆரோக்கியம்

    தொடங்கியது தர்பூசணி சீசன்! தர்பூசணி பழத்தின் நன்மைகள் என்னவென்று தெரியுமா? ஆரோக்கியம்
    நாள்பட்ட சோர்வு நோய்க்குறியின் அறிகுறிகளும், அதன் காரணங்களும் உடல் நலம்
    இன்று சர்வதேச விக் நாள்: இந்நாளின் வரலாறும், சில சுவாரஸ்ய தகவல்களும் முடி பராமரிப்பு
    சுற்றுலாவின் போது நீங்கள் நோய்வாய்ப்படுவதை எவ்வாறு தவிர்க்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள் சுற்றுலா

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023