ஒரு இரவு தூக்கம் இல்லாமல் இருந்தால், உங்கள் மூளை இரண்டு வருடங்கள் வயதாகிவிடும்; அதிர்ச்சி தகவல்
பரீட்சை அல்லது வேலை காரணமாக இரவு தூக்கமின்றி விழித்திருப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி! ஒரு இரவு மட்டும் தூங்காமல் இருந்தால், உங்கள் மூளை இரண்டு வருடங்கள் வயது கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ஜர்னல் ஆஃப் நியூரோ சயின்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கைப்படி, தூக்கத்திற்கு மூளை செயல்பாட்டிற்கும் நடக்கும் மாற்றங்கள் தெரியவருகின்றன. அதே அறிக்கையில், ஒரு இரவு நல்ல தூக்கத்திற்குப் பிறகு, உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுகிறது. 19 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், 134 பேர் பங்கேற்ற இந்த ஆய்வில், தூக்கம் இல்லாதவர்களின் மூளையின், காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) ஸ்கேன் மூலம் "மூளை வயது" மதிப்பீடுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
நல்ல தூக்கம், மூளை வளர்ச்சிக்கு உதவும்
19 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், 134 பேர் பங்கேற்ற இந்த ஆய்வில், தூக்கம் இல்லாதவர்களின் மூளையின், காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) ஸ்கேன் மூலம் "மூளை வயது" மதிப்பீடுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில், "தூக்க இழப்பு என்பது, இளம் பங்கேற்பாளர்களில் கூட, வயதானவர்களின் மூளை உருவ அமைப்பை போல மாறுகிறது என்றும், எனினும் இந்த மாற்றங்கள், தூக்கத்தின் மூலம் மீளக்கூடிய அமைப்பு" என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை, ஜெர்மனியின் RWTH ஆச்சென் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஈவா-மரியா எல்மென்ஹார்ஸ்ட் என்பவர் நடத்தினார். இது பற்றி கூறும் இந்திய மருத்துவர்கள், "மூளையின் தனித்துவமான அம்சம், நரம்பியல் பிளாஸ்டிசிட்டியின் நிகழ்வு ஆகும். நரம்பியல் பிளாஸ்டிசிட்டியை மாற்றக்கூடிய மிக முக்கியமான காரணிகளில் ஒன்று தூக்கம்" என்கின்றனர்