வைரல் செய்தி: ஒரு இங்கிலாந்து பெண், ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்குகிறார்; காரணம் தெரியுமா?
இங்கிலாந்தை சேர்ந்த ஒரு இளம் பெண், அரிய மருத்துவ நிலை காரணமாக, ஒரு நாளைக்கு சுமார் 22 மணிநேரம் தூங்குகிறாள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? பத்திரிக்கை தகவல்கள் படி, ஜோனா காக்ஸ் என பெயர்கொண்ட அந்த பெண், 38 வயதானவர். இடியோபாடிக் ஹைப்பர் சோம்னியா என்ற அசாதாரண மருத்துவ நிலையால் அவதிப்படுகிறார். இந்த கோளாறால் பாதிக்கப்பட்ட நபர், நல்ல தூக்கத்திற்கு பிறகும், மந்தமாகவே உணருவார்கள். அந்த பெண்ணால், தான் எவ்வளவு நேரம் தூங்கினோம், எந்த நாள் என்று தீர்மானிக்க முடியாததால், தனது இந்த கோளாறு, தனது வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்று தற்போது தெரிவித்துள்ளார். இந்த பெண்மணி, இவ்வகை நோயால், 2017-ஆம் ஆண்டிலிருந்து அவதிப்பட்டு வருவதாக கூறுகிறார்.
இடியோபாடிக் ஹைப்பர் சோம்னியா
இது எப்படி தொடங்கியது என்றும், அதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அந்தப் பெண் கூறுகிறார். இறுதியாக, அக்டோபர் 2021 இல், மருத்துவர்கள், அவருக்கு இடியோபாடிக் ஹைப்பர் சோம்னியா இருப்பதைக் கண்டறிந்தனர். ஆனால் இந்த நோய்க்கான மருந்தோ, மருத்துவ சிகிச்சையோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நாளாக ஆக, அவரின் நிலை மோசமடைந்ததையொட்டி, அவர் வேளையில் இருந்து வெளியேற வேண்டி இருந்தது. தனது குடும்பத்தினருடன் அவர் செல்ல வேண்டிய விடுமுறையை கூட இதனால் இழக்க நேரிட்டது. இந்த நிலையையும் மீறி, அவள் விழித்திருக்க நேரிட்டால், மனப்பிரமைகள் மற்றும் அழுத்தங்கள் ஏற்படுவதாக அந்த பெண் கூறுகிறாள். தற்போது தன்னுடைய நிலையை அவரின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ஆவணப்படுத்தி வருகிறார்.