கல் உப்பு குளியலின் மகத்துவம் பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன தெரியுமா?
தினமும் நீங்கள் குளிக்கும்போது, ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து குளித்தால் நன்மை தரும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வழக்கத்தை முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர். ஆனால், காலப்போக்கில் அந்த பழக்கத்தை மறந்துவிட்டு நவீனமயமாகி விட்டனர் மக்கள். தற்போது அதன் மகத்துவத்தை மீண்டும் உரக்க கூறிவருகின்றனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். வீங்கிய தசைகள் அல்லது வலியுள்ள மூட்டுகளுக்கு நல்லது: மூட்டு வலிகள் மற்றும் வீங்கிய தசைகளை எதிர்த்துப் போராடுவதற்கு கடல் உப்பு குளியல் ஒரு சிறந்த தீர்வாக அமையும். முடக்கு வாதம் உள்ளவர்கள் இதை தினமும் பயிற்சி செய்யலாம். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால், வீங்கிய தசைகளின் வலி குறையும்.
தோல் அழற்சிகளுக்கு அருமருந்தாகும் கல் உப்பு
தோல் வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கிறது: வறண்ட சருமத்தினருக்கு, இந்த குளியல், உடல் அரிப்பை குறைக்கும். ஏனெனில், பாதிக்கப்பட்ட பகுதியைச்சுற்றியுள்ள நச்சுகளை, உப்பு சுத்தீகரிக்கிறது. முகப்பரு, அடோபிக் டெர்மடிடிஸ் உள்ளவர்களுக்கும் கடல் உப்புடன் குளிப்பது நன்மை பயக்கும். நல்ல தூக்கத்தை வழங்குகிறது: உறங்குவதற்கு முன், வெதுவெதுப்பான குளிப்பது தூக்கத்தை வளர்க்கும். இருப்பினும், கல் உப்புடன் குளிக்கும் போது, இதில் உள்ள மெக்னீசியம், மூளையின் நரம்பியக்கடத்திகளை ஒழுங்குபடுத்துவதால், ஆழ்ந்த உறக்கத்திற்கு கை கொடுக்கிறது. மன அழுத்தம், பதற்றம், பதட்டம் ஆகியவற்றைக் குறைக்கிறது: கல் உப்பு நிரம்பிய தண்ணீரில் சிறிது நேரம் அமர்ந்து இருக்க, உங்கள் உடலில் உள்ள இரத்த ஓட்டம் சீராகிறது. உங்கள் நரம்புகளை தளர்த்தி, உங்கள் தசைகளில் இருந்து பதற்றத்தை நீக்கி, மன சோர்வை நீக்குகிறது.