உங்கள் நகங்களின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை அறியலாம்
உங்கள் நகங்களின் தோற்றம், சில நேரங்களில் உங்கள் அடிப்படை சுகாதார நிலைமைகள் பற்றிய குறிப்புகளை வழங்கலாம். இங்கே உங்கள் நகங்கள் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை எப்படி தெரிந்து கொள்வது எனகுறிப்பிடப்பட்டுள்ளது. நகங்களின் வடிவம் மற்றும் அமைப்பு: குழிவான, ஸ்பூன் வடிவ நகங்கள், இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். உடையக்கூடிய, மெல்லிய அல்லது விரிசல் நகங்கள், தைராய்டு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். விரல் நுனியில் நகங்கள் வளைந்திருப்பது நுரையீரல் நோய், இதய நோய் மற்றும் குடல் அழற்சி நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். நகங்களில் குழி இருந்தால், ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறாக இருக்கலாம். நகங்கள் நிறமாற்றம் அடைந்தால்: மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும் நகங்கள் பூஞ்சை தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
நகங்களின் வளர்ச்சி கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ளுங்கள்
நகங்களில் மஞ்சள்-இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு-சிவப்பு புள்ளிகள், மேற்புறத்திலிருந்து நகத்தின் நுனி வரை நீள்வது, உங்களுக்கு சொரியாசிஸ் இருப்பதைக் குறிக்கிறது. மஞ்சள் நகங்களும் மஞ்சள் காமாலை அறிகுறியாக இருக்கலாம். நகங்களின் வளர்ச்சி: நகங்களின் வளர்ச்சி சீரற்றதாக இருந்தால், இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். விரைவான நக வளர்ச்சி, ஹைபராக்டிவ் தைராய்டின் அறிகுறியாக இருக்கலாம். உங்கள் நகங்கள் சீரற்றதாகவோ அல்லது உடைந்து வளர்ந்தால், அது நீரிழிவு அல்லது இரத்த ஓட்டப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். நகங்களில் கோடுகள் இருந்தால்: நகங்களின் குறுக்கே செல்லும் கோடுகள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயைக் குறிக்கலாம் அல்லது துத்தநாகக் குறைபாட்டை குறிக்கலாம். கீமோதெரபி செய்து கொண்டிருந்தால், அவர்களின் நகங்களிலும் மாதிரி கோடுகள் தோன்றும்.