சரும பிரச்சனைகளுக்கு பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்: மருத்துவர்கள் பரிந்துரை
செய்தி முன்னோட்டம்
புரதமும், கால்சியமும் நிறைந்துள்ள பால், எலும்புகள் வலு பெற உதவும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சரும பிரச்சனைகளுக்கு, இந்த பால் சம்மந்தப்பட்ட பொருட்கள், மிக பெரிய எதிரி என சரும நிபுணர்கள் கூறுகின்றனர்.
பால் பொருட்கள், சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய சில தகவல்கள் இதோ:
ஹார்மோன் தாக்கம்: கேசீன் என்பது பசுவின் பாலில் காணப்படும் ஒரு புரதம். அது, உடலில் இன்சுலின், ப்ரோலாக்டின மற்றும் ஸ்டீராய்டுகள் உட்பட பல ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது.
மறுபுறம், பால் உற்பத்தியை அதிகரிக்க, rBGH, எனும் ஒரு செயற்கை ஹார்மோனை, மாடுகளுக்கு செலுத்துகின்றனர். அதுவும், உடலில் உள்ள ஹார்மோன்களை பாதித்து, முகத்தில் எண்ணெய்ப்பசையை அதிகரிக்கது, முகத்துவாரங்களை அடைக்கிறது. இதனால், முகப்பரு உண்டாகும்.
சரும பிரச்சனை
சரும ஒவ்வாமையை உண்டாக்கும் லாக்டோஸ் சகிப்பின்மை
இன்சுலின் அதிகரிப்பு: இனிப்பு பண்டங்களால், குறிப்பாக பாலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகளால், உடலில் உள்ள இன்சுலின் அளவு பாதிக்கப்படுகிறது. பாலில் உள்ள புரத சத்துகள், இன்சுலின் போலதான் ஜீரணிக்கப்படும். அவை, முகப்பரு, தோலழற்சி மற்றும் ரோசாசியா போன்ற தோல் மாற்றங்களையும், மற்றும் அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ், அமிலாய்டோசிஸ், போன்ற தொற்றுகளுக்கும் வழிவகுக்கின்றன.
லாக்டோஸ் சகிப்பின்மை: பால் பொருட்களில் இயற்கையாக அமைந்திருக்கும் சர்க்கரையின் பெயர் லாக்டோஸ் ஆகும்.
உங்கள் சிறுகுடல், பால் சர்க்கரையை (லாக்டோஸ்) ஜீரணிக்க போதுமான நொதியை (லாக்டேஸ்) உற்பத்தி செய்யாதபோது லாக்டோஸ் சகிப்பின்மை ஏற்படுகிறது.
லாக்டேஸ் குறைபாடு இருந்தால், லாக்டோஸ் பதப்படுத்தப்பட்டு, உறிஞ்சப்படுவதற்குப் பதிலாக பெருங்குடலுக்குள் செல்கிறது. அங்குள்ள பாக்டீரியாக்கள், இந்த லேக்டோசுடன் இணையும்போது, சரும ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.