NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

    கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 02, 2024
    05:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று காலை பாலிவுட் நடிகையும், பிரபல மாடலுமான பூனம் பாண்டே தனது 32 வயதில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்தார்.

    இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 10% ஆகும் இது.

    பெண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பொதுவான புற்றுநோயான இந்த நோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தை அது மேலும் உணர்த்துகிறது.

    உலக சுகாதார அமைப்பின்(WHO) கூற்றுப்படி, கடந்த ஆண்டில் 6,61,044 புதிய நோய் தொற்றுகள் மற்றும் 3,48,186 இறப்புகளுடன், உலகளவில் பொதுவாக நிகழும் புற்றுநோயாக இது எட்டாவது இடத்திலும், புற்றுநோய் இறப்புக்கு ஒன்பதாவது முக்கிய காரணியாகவும் இந்த நோய் இருக்கிறது.

    கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கருப்பை வாயில் ஏற்படுகிறது. இது கருப்பையின் யோனியுடன் இணைக்கும் கீழ், குறுகிய முனையாகும்.

    காரணிகள் 

    கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் காரணிகள் 

    கருப்பை வாயில் புற்றுநோய் தோன்றுவதற்கு முன், செல்கள் டிஸ்ப்ளாசியா எனப்படும் மாற்றங்களைச் சந்திக்கின்றன.

    இதில் அசாதாரண செல்கள் வளரத் தொடங்கி கருப்பை வாயில் ஆழமாக பரவி பின்னர் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பரவுகின்றன.

    மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) மூலம் ஒரு நபருக்கு பாலியல் ரீதியாக பரவும் தொற்று ஏற்பட்டால், இந்த நிலை ஏற்படுகிறது.

    சில சந்தர்ப்பங்களில், வைரஸ், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மூலம் அகற்றப்பட்டாலும், சில சந்தர்ப்பங்களில், வைரஸ் HPV 16 அல்லது HPV 18 எனில் - கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, கிட்டத்தட்ட அனைத்து பாலியல் தொழிலாளர்களும் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் HPV நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அறிகுறிகள்

    கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் கண்டறிதல்

    பல சந்தர்ப்பங்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது ஆரம்ப கட்டங்களில் வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    இருப்பினும், நோய்த்தொற்று பரவி, அசாதாரண செல்கள் வளரும்போது, ​​அறிகுறிகள் அசாதாரணமான பிறப்புறுப்பு இரத்தப்போக்கு வடிவில் தோன்றத் தொடங்குகின்றன.

    மாதவிடாய்க்கு இடையில் அல்லது மாதவிடாய் நின்ற பிறகு இரத்தப்போக்கு, நீர் அல்லது துர்நாற்றம் கொண்ட யோனி வெளியேற்றம் மற்றும் குறிப்பாக உடலுறவின் போது இடுப்பு வலி போன்றவை இவற்றை அறிகுறிகள்.

    ஒரு எளிய பாப் பரிசோதனை மூலம் கருப்பை வாயில் உள்ள புற்றுநோய் செல்களை கண்டறிய முடியும்.

    கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனையானது 21 முதல் 29 வயதிலேயே தொடங்கலாம்.

    சிகிச்சை 

    கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க முடியுமா?

    கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுக்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய நோயாகும்.

    இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் திறம்பட குணப்படுத்திவிடலாம்.

    கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான சிறந்த வழி தடுப்பூசி போடுவதுதான். இந்த வகை புற்றுநோயைத் தடுப்பதில் HPV தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் அவசியமானவை.

    Cervavac (HPV 6,11,16,18 க்கு எதிரான தடுப்பூசி) மற்றும் Gardasil-9 (9 HPV வகைகளுக்கு எதிரான தடுப்பூசி) ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் ஆகும்.

    இந்தியாவின் முதல் HPV தடுப்பூசி, Cervavac, ஜனவரி 2023 இல் இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது- ஒரு டோஸ் 2,000 ரூபாய்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புற்றுநோய்
    பெண்கள் ஆரோக்கியம்
    பெண்கள் நலம்
    ஆரோக்கியம்

    சமீபத்திய

    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்

    புற்றுநோய்

    சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக நோய்கள்
    உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ உடல் ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள் உடல் ஆரோக்கியம்
    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா டென்னிஸ்

    பெண்கள் ஆரோக்கியம்

    பெண்கள் ஸ்பெஷல்: நீங்கள் மகிழ்ச்சியாக மாற என்ன செய்ய வேண்டும் மன ஆரோக்கியம்
    பீரியட்ஸ் வலியை சமாளிக்க, வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சில பானங்கள் பெண்கள் நலம்
    எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு மாதம்: பெண்களை தாக்கும் இந்த நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை உடல் ஆரோக்கியம்
    பிரசவத்திற்குபின் பெண்களின் ஆரோக்கியம்: தோல், முடி மற்றும் உடலை பராமரிக்க சில குறிப்புகள் ஆரோக்கியம்

    பெண்கள் நலம்

    சர்வதேச மகளிர் தினத்தன்று நீங்கள் அணிய வேண்டிய நிறங்களும், அவற்றின் அர்த்தங்களும் பெண்கள் தினம்
    மருத்துவம்: இரும்பு சத்து சப்ளிமென்ட்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதன் பின்னணி என்ன? ஆரோக்கியம்
    தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    'உங்களை நீங்களே காதலியுங்கள்' என்ற புதுமொழிக்கேற்ப வாழும் இரண்டு புரட்சி பெண்கள் பெண்கள் ஆரோக்கியம்

    ஆரோக்கியம்

    என்றென்றும் இளமையாக இருக்க, உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆயுர்வேத பொருட்கள் ஆயுர்வேதம்
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியம்
    உங்கள் காலை உணவை மேம்படுத்தும் விதைகள்  உணவுக் குறிப்புகள்
    வெறும் வயிற்றில் தண்ணீர் ஏன் குடிக்க வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் உடல் ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025