
சஃபாரி செல்லும்போது நீங்கள் எடுத்துச்செல்லவேண்டிய அத்தியாவசியங்கள் இவைதான்
செய்தி முன்னோட்டம்
சஃபாரி ட்ரிப் போகவேண்டும் என்பது இயற்கையின் அழகை அனுபவிக்க விரும்பும் பலரின் கனவாகும்.
ஆப்பிரிக்காவின் சமவெளிகளோ, ஆசியாவின் காடுகளோ அல்லது பந்திப்பூர் காடுகளோ, நீங்கள் எங்கு சஃபாரி பயணம் செய்தாலும், திறமையான பேக்கிங் முக்கியம்.
அப்படி உங்கள் வசதிக்காக, நீங்கள் எடுத்துச்செல்லவேண்டிய முக்கியமான பொருட்கள் என்னவென்று கீழே பட்டியலிட்டுளோம்.
பைனாகுலர் மற்றும் சன் ஸ்க்ரீன்: வனவிலங்குகளின் இயல்பான நடத்தைக்கு இடையூறு இல்லாமல் அவற்றை காண, பைனாகுலர் இன்றியமையாதவை. மேலும், வனப்பகுதி சஃபாரி செல்வதாக இருந்தால், உங்கள் சருமத்தை பாதுகாக்க அதிக SPFகள் கொண்ட சன்ஸ்கிரீன்கள் மிக முக்கியமானது. கண்களுக்கு சன்கிளாஸ்கள் மற்றும் உங்கள் முகம் மற்றும் கழுத்தை நேரடி சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க ஒரு பரந்த விளிம்பு கொண்ட தொப்பி ஆகியவை இன்றியமையாதவை.
சஃபாரி ட்ரிப்
உங்கள் பேக்கிங் அத்தியாவசியங்கள்
வசதியான ஆடை மற்றும் காலணி: சஃபாரி சாகசங்களுக்கு வசதியான அதேநேரத்தில் இலகுரக ஆடைகள் அவசியம். சிலநேரங்களில் கடினமான பாதைகளில் நடக்கவேண்டியிருக்கும். அதனால், கால்களை நன்றாக மூடிய ஹைகிங் பூட்ஸை இன்றியமையாதது.
பாதுகாப்பு மருந்துகள்: கொசுக்கள் மற்றும் பூச்சிகள் கடிக்காமல் இருக்க, பூச்சிகளை விரட்டும் மருந்துகள் அவசியம். கூடுதலாக, சிறிய காயங்கள் மற்றும் நோய்களுக்கு ஒரு சிறிய முதலுதவி பெட்டியை பேக் செய்யதுக்கொள்ளுங்கள்.
தண்ணீர் பாட்டில், சானிடைசர்: உங்கள் சஃபாரி பயணம் முழுவதும் நீரேற்றமாக இருக்க, தண்ணீர் பாட்டில் அவசியம். அதேநேரத்தில் கிருமி தொற்றிலுந்து பாதுகாக்க, வெட் வைப்ஸ் மற்றும் சானிடைசரையும் எடுத்துச்செல்லுங்கள்.
டிஜிட்டல் வழிகாட்டி: நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் பாதைகளை தெரிந்து கொள்ள ஒரு வழிகாட்டி அல்லது மேப் அவசியம்