உங்கள் தலைமுடிக்கு எளிதாக செய்யக்கூடிய மாதுளை மாஸ்க்குகள்
மாதுளம்பழங்கள், அவற்றின் இனிப்பான சுவையுடன், ஆரோக்கியமான கூந்தலைப் பராமரிப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா? அவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்களின் உள்ளடக்கத்தை கொண்டுள்ளன. அவை எளிதான ஹேர் மாஸ்க்குகளை வடிவமைப்பதில் சிறந்த தேர்வாக அமைகின்றன. இந்த மாஸ்குகள் முடியை வலுப்படுத்தவும், இயற்கையான பிரகாசத்தை வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய சில மாதுளை அடிப்படையிலான ஹேர் மாஸ்க்குகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். மாதுளை விதை எண்ணெய்: உங்கள் தலைமுடியை அடர்த்தியாக வளர்க்க, இரண்டு தேக்கரண்டி மாதுளை விதை எண்ணெயை, ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயுடன் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் ஊறவிட்டு, முடியை அலசவும்.
எளிதாக செய்யக்கூடிய மாதுளை மாஸ்க்குகள்
மாதுளை தோல் பவுடர் மாஸ்க்: ஒரு புத்துணர்ச்சியூட்டும் உச்சந்தலை ஸ்க்ரப்-ஐ உருவாக்க, முதலில் மாதுளை தோல்களை உலர்த்தி, பொடியாக்கி கொள்ளவும். ஸ்க்ரப் அமைக்க இந்த பொடியை, கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். மாதுளை தோலில் உள்ள எலாஜிக் அமிலம் உச்சந்தலையை சுத்தப்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில் கற்றாழை ஈரப்பதமாக்க உதவும். ஆக்ஸிஜனேற்ற நிறைந்த மாதுளை சாறு மாஸ்க்: அரை கப் மாதுளை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பளபளப்பான ஹேர் மாஸ்க்கை உருவாக்கவும். மாதுளை தயிர் மாஸ்க்: கூந்தல் நீரேற்றத்திற்கு, இரண்டு தேக்கரண்டி மாதுளை சாற்றை அரை கப் தயிருடன் கலக்கவும். மாதுளை சாறு ஆழமாக ஹைட்ரேட் செய்து மந்தமான முடியை மீட்டெடுக்கிறது.