கீரையை விட அதிக இரும்பு சத்து உள்ள உணவுகள் இவைதான்
செய்தி முன்னோட்டம்
இரும்புச்சத்தின் மிக உயர்ந்த உணவு ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளும்போது, அனைவரும் மாற்றுக்கருத்தில்லாமல் கூறும் ஒரு உணவு பொருள், கீரை.
ஆனால் கீரையை விட அதிகமான இரும்பு சத்து நிரம்பிய காய்கறிகள் ஏராளம் உள்ளன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
ஆம், நாம் பொதுவாக பயன்படுத்தக்கூடிய சில உணவு பொருட்களில், கீரையை விட அதிக அளவு இரும்பு சத்து நிறைந்துள்ளது.
அவை என்ன என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
card 2
பாதாமி பழம் (Apricot)
உங்கள் உணவில் பாதாமி பழங்களை சேர்க்க வேண்டும் என்பதற்கு பல ஆரோக்கியமான காரணங்கள் உள்ளன.
அவற்றில் ஒன்று, அந்த பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்பு சத்து ஆகும்.
100 கிராம் பாதாமிபழத்தில் சுமார் மூன்று மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது,
அதே சமயம் 100 கிராம் கீரையில் 2.7 மில்லிகிராம் தான் உள்ளது. அப்படியென்றால் இந்த பழத்தில் உள்ள ஊட்டச்சத்தின் மகத்துவத்தை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.
சுவாரஸ்யமாக, உலர்ந்த பாதாமி மற்றும் கீரை இரண்டிலும் ஒரே அளவு இரும்பு உள்ளது.
card 3
அமராந்த்
இரும்புச்சத்து குறைபாட்டைத் தவிர்க்க நீங்கள் உண்ண வேண்டிய மற்றொரு அருமையான சிறுதானியம் அமராந்த்.
இந்த உணவில் 100 கிராம் அளவு ஐந்து முதல் எட்டு மில்லிகிராம் இரும்புச்சத்தை வழங்குகிறது.
இது அதே அளவு கீரையை விட, இதில் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தினையை உங்கள் அன்றாட உணவிற்கு பயன்படுத்தி, பலவிதமான ஆரோக்கியமான உணவுகளை சமைக்கலாம்.
card 4
சியா விதைகள்
சியா விதைகள் கூட, இரும்புச்சத்து அடிப்படையில் கீரையை மிஞ்சி விடுகின்றன.
ஏனெனில் இந்த விதைகளில் 100 கிராம் அளவில் 7.7 மி.கி இரும்புச்சத்து உள்ளது.
அவை வழங்கும் ஆரோக்கிய நன்மைகள், சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் உட்புற சுத்திகரிப்புக்கு உதவுவது என தொடங்கி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது.
தினமும் இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை உட்கொள்வது, 2.2 மில்லிகிராம் இரும்புச்சத்தை வழங்குகிறது.
இது பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவில் 12% ஆகும்.
card 5
முந்திரி
அடுத்ததாக, முந்திரி. இதிலும், கீரையை மிஞ்சும் வகையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.
100 கிராமுக்கு 6.7 மி.கி இரும்புச்சத்து இருப்பதால், முந்திரி, இரும்பின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.
இருப்பினும், முந்திரியை அதிகமாக உட்கொள்வது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
நீங்கள் அதிகமாக முந்திரி சாப்பிடுவதால், கொழுப்பு சத்தும் அதிகரிக்க கூடும்.
உணவு அளவிற்கு மிஞ்சினால், அமுதமும் நஞ்சு என்பதை மறக்க வேண்டாம்.