Page Loader
கருமுட்டை உறைதலும் IVF முறையும் ஒன்றா? தெரிந்துகொள்ளுங்கள்
இம்முறைக்கு சற்று அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும்

கருமுட்டை உறைதலும் IVF முறையும் ஒன்றா? தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 16, 2024
04:16 pm

செய்தி முன்னோட்டம்

பெண்கள் நலம்: சமீப காலங்களில் பல பிரபலங்கள் கருமுட்டை உறைதல்(Egg Freezing) பற்றி பேசி கேட்டிருப்பீர்கள். அப்படி என்றால் என்ன? இதுவும், செயற்கை கருத்தரித்தல் ஒன்றா? இதற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். கருமுட்டை உறைதலுக்கு நீங்கள் திருமணமானவரா இல்லையா என்பது முக்கியமல்ல; நீங்கள் விரும்பும் எந்த வயதிலும் தாய்மையை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால், இம்முறைக்கு சற்று அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும். முட்டை உறைதல், ஓசைட் கிரையோப்ரெசர்வேஷன் என்றும் அழைக்கப்படுகிறது. இது எதிர்கால பயன்பாட்டிற்காக ஒரு பெண்ணின் முட்டைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். Egg freezing என்பது பெண்ணின் உடலில் இருந்து முட்டைகளை பிரித்தெடுத்து, அதை ஃப்ரீஸ் செய்து சேமிக்கப்படும் ஒரு மருத்துவ முறையாகும்.

வித்தியாசம்

முட்டை உறைதல் மற்றும் IVF

முட்டை உறைதல் முறையில், உங்கள் முட்டைகளை சேமித்து பாதுகாத்து வைத்திருப்பதால், பிற்கால வாழ்க்கையில், இனப்பெருக்கம் செய்வதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்குகிறது. ஆனால் IVF முறை உடனடியாக கர்ப்பம் தரிக்க உதவுகிறது. IVF என்பது கருவுறுதல் சிகிச்சையின் ஒரு வகையாகும். அங்கு கருமுட்டைகள் மீட்டெடுக்கப்பட்டு, விந்து மாதிரியுடன் உடலுக்கு வெளியே கருவாக்கி, பின்னர் உடலில் பொருத்தப்படுகின்றன. ஆனால், முட்டை உறைதல் முறையில், எதிர்கால பயன்பாட்டிற்காக, கருவுறாத முட்டைகளை பாதுகாக்கப்படுகிறது. விந்தணுக்களுடன் இணைக்கபடுவதில்லை. இது பொதுவாக திருமணமாகாத மற்றும் இன்னும் குழந்தை பெற விரும்பும் பெண்களுக்காக செய்யப்படுகிறது. நீங்கள் அவற்றைப் பயன்படுத்த முடிவு செய்யும் வரை முட்டைகள் திரவ நைட்ரஜனில் சேமிக்கப்படும்.