நீங்கள் IVF-ஐ திட்டமிடுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள்
செய்தி முன்னோட்டம்
தற்போது நாடு முழுவதும் பலரும், குழந்தை பேறுக்காக IVF முறைகளை தேர்வு செய்து வருகின்றனர்.
அதன் பின்னர் பல தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம்.
ஆனால், IVF க்கு முன் நீங்கள் பலகட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
அவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது அவசியம்.
அது என்னென்ன சோதனைகள், எதற்காக மேற்கொள்ள படுகின்றன என்பதை பற்றி ஒரு சிறு குறிப்பு இதோ:
card 2
IVF முறை என்றால் என்ன?
இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (IVF) என்பது ஒரு சிக்கலான இனப்பெருக்க உதவி தொழில்நுட்பமாகும்.
இது இயற்கையாக கருத்தரிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளும் தனிநபர்கள் அல்லது தம்பதிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் ஒரு மருத்துவமுறை ஆகும்.
இந்த செயற்கை கருத்தரித்தல் முறையில், முதற்கட்டமாக, ஏராளமான முட்டைகளை உற்பத்தி செய்ய கருப்பை தூண்டப்படும்.
பின்னர் அந்த முட்டைகள், ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்கப்படுகின்றன.
இந்த முட்டைகள் பின்னர் ஒரு ஆய்வக சூழலில் விந்தணுவுடன் இணைந்து, கருத்தரிப்பதற்கு வழிவகுக்கும்.
அதன் பின்னர், கருக்கள் அவற்றின் தரத்தை மதிப்பிட ஐந்து நாட்களுக்கு கண்காணிக்கப்படுகின்றன.
அதன்பிறகு, ஒன்று அல்லது இரண்டு நல்ல தரமான கருக்கள் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கர்ப்பத்தை எதிர்பார்க்கும் பெண்ணின் கருப்பையில் வைக்கப்படுகின்றன.
card 3
செயற்கை கருத்தரிப்பிற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் சோதனைகள்
செயற்கை கருத்தரிப்பிற்கு முன்னர், டிரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் (TVS) செய்யப்படும். இது IVF சிகிச்சையின் போக்கை தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமான சோதனையாகும். இதன்மூலம், கருப்பை அளவு மற்றும் கருப்பை வடிவம், எண்டோமெட்ரியல் தடிமன் மற்றும் ஏதேனும் அசாதாரணங்கள் உள்ளனவா என கண்டறிய உதவும்.
ஹார்மோன் அளவை மதிப்பிடுவது அவசியம்
ஹிஸ்டெரோசல்பிங்கோகிராபி: ஃபலோபியன் குழாய்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை கண்டறியும் சோதனை
விந்து மதிப்பீடு
பால் உற்பத்தி மற்றும் கருவுறுதல் தொடர்பான புரோலேக்டின் ஹார்மோன் சோதனை
தைராய்டு செயல்பாடு
எச்.ஐ.வி., ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, சிபிலிஸ், கிளமிடியா, ரூபெல்லா மற்றும் வெரிசெல்லா போன்ற தொற்று நோய்களுக்கான ஸ்கிரீனிங்
மரபணு சோதனைகள்
இவற்றோடு, அடிப்படை இரத்த பரிசோதனைகள்.