
இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும், அதிகம் அறியப்படாத சில அரிசி வகைகள்
செய்தி முன்னோட்டம்
இந்திய அரிசி வகைகளைப் பொறுத்தவரை, பச்சரிசி, புழுங்கல் அரிசி, பாசுமதி அரிசி போன்றவை பரவலாக பயன்படுத்தப்படும் வகைகள் ஆகும்.
இருப்பினும், இவற்றை தவிர வேறு சில அரிசி வகைகளும் அண்டை மாநிலங்களில் புழக்கத்தில் உள்ளது. அவை சுவையானவை மற்றும் அதிக சத்தானவை.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விளையும், தனித்துவமான சுவைகள், நறுமணம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சில அரிசி வகைகள் இங்கே:
துளசி ஜோஹா அரிசி, அசாம்: இந்த அரிசியில், கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. கூடுதலாக, ஃபிளாவனாய்டுகளில் மற்றும் அதிக ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது.
கோபிந்த்போக் அரிசி, மேற்குவங்காளம்: இந்த அரிசி வகை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், சீரான செரிமானத்தை ஊக்குவிக்கவும், ஒட்டுமொத்த நல்ல ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.
அரிசி வகைகள்
ஊட்டச்சத்துகள் நிறைந்த அரிசி வகைகள்
சிவப்பு அரிசி, உத்தராகண்ட்: இவ்வகை அரிசியில், க்ளுட்டன் மற்றும் GMO இல்லை. அதனால், உணவு கட்டுப்பாடுகள் அல்லது உடல்நலக் கவலைகள் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த அரிசியில், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது, எலும்பு ஆரோக்கியம் மற்றும் நரம்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
கருப்பு அரிசி, மணிப்பூர்: இதுவும், க்ளுட்டன் ஃபிரீ அரிசியாகும். இந்த அரிசியில், ஒரு தனித்துவமான நறுமணம் மற்றும் சுவை உள்ளது. இந்த அரிசியில், "அந்தோசயனின்கள்" என்று அழைக்கப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இதன் மூலம் இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.