Page Loader
ஹக் டே 2023: பல்வேறு வகையான அரவணைப்புகளும் மற்றும் அவற்றின் அர்த்தங்களும்
அரவணைப்புகளும் மற்றும் அவற்றின் அர்த்தங்களும்!

ஹக் டே 2023: பல்வேறு வகையான அரவணைப்புகளும் மற்றும் அவற்றின் அர்த்தங்களும்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 11, 2023
05:53 pm

செய்தி முன்னோட்டம்

வாலண்டைன் வாரத்தில், ரோஸ் டே துவங்கி ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே போன்றவை கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும், (பிப்.12 ) ஹக் டேவாக கொண்டாடப்படுகிறது. ஒருவரை கட்டி அரவணைப்பதன் மூலம், பல நற்பயன்கள் உடலுக்கும், மனதிற்கும் நிகழ்கிறது என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதேசமயம் பலவகையான அரவணைப்புகளும், அதற்கென சில அர்த்தங்களும் உண்டென்றும் உங்களுக்கு தெரியுமா? ஒரு ஆராய்ச்சிபடி, பெரும்பாலான மக்கள் வலது பக்க அரவணைப்புகளுக்கு அதிக விருப்பம் காட்டுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வலது கைப் பழக்கம் உள்ளவர்கள் பொதுவாக மற்ற நபரை வலது பக்கத்திலிருந்து கட்டிப்பிடிக்க முனைகிறார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹக் டே

அரவணைப்பில் பல வகைகள்

ஒரு பக்க அரவணைப்பு என்பது நீங்கள் அந்த நபருடன் இப்போது அறிமுகம் ஆகியுள்ளீர்கள் என்றும், அவர்களுடன் இன்னும் நெருக்கமாக பழகவில்லை என்றும் அர்த்தம். பின்னாலிருந்து கட்டிப்பிடிப்பது என்பது ஆழமான உணர்வுகளைக் குறிக்கும். இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதைக் குறிக்கிறது. இடுப்பைக் கட்டிப்பிடிப்பது என்பது ஒரு நெருக்கமான காதல் அரவணைப்பு என்று பொருள். மேலும் அந்த நபர் முடிந்தவரை அதிக நேரம் ஒன்றாகச் செலவிட விரும்புகிறார் என்று அர்த்தம். இறுக்கமான அணைப்பு என்பது பாதுகாப்பாக உணரும்போது தருவது. கருப்பையில் இருப்பதை நினைவூட்டுவது போன்றது. முதுகில் தட்டி அரவணைத்தால், சகோதரர் அல்லது நண்பர்களுக்கு இடையே பகிரப்படும் ஆறுதலைக்குறிக்கும் பிக்பாக்கெட் அரவணைப்பு என்பது ஒரு இனிமையான, காதல் அரவணைப்பு. இது அவர்கள் உங்களை நம்புவதைக் குறிக்கிறது.