காதலர் தின வாரம்: பிராமிஸ் டே வரலாறும், முக்கியத்துவமும்
செய்தி முன்னோட்டம்
ஆண்டுதோறும், பிப்ரவரி 2-வது வாரம் முழுக்க, காதலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காதலர் வாரமாக கருதப்படும் அந்த வாரத்தில், ரோஸ் டே துவங்கி ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே போன்றவை கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று, பிப்ரவரி 11ஆம் தேதி, 'பிராமிஸ் டே' என்று கொண்டாடப்படுகிறது.
காதலிக்கும் இரண்டு நபர்களும், அனைத்து சந்தர்ப்பங்களிலும், ஒருவருக்கொருவர் துணை நிற்போம் என்று வாக்குறுதிகள் பரிமாறிக்கொள்ளும் நாள் என்று அர்த்தம்.
இந்த நாள், உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த வாக்குறுதிகளை வழங்குவதற்கும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
இந்நாளில், நீங்கள் நிறைவேற்ற துடிக்கும் வாக்குறுதிகளை பட்டியலிட்டு, அழகிய பரிசுடன் உங்கள் மனதிற்கு பிடித்தமானவர்களுக்கு தரலாம்.
காதலர் தின வாரம்
பிராமிஸ் டே வரலாறு:
பண்டைய ரோமானிய திருவிழாவான லுபர்காலியாவில் இந்த நாளின் வரலாறு தொடங்கியதாக நம்பப்படுகிறது.
வசந்த காலத்தின் வருகையை கொண்டாடும் விதமாக இந்த விழா, பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை, மூன்று நாட்களாக கொண்டாடப்பட்டது.
கி.பி 496 இல், போப் கெலாசியஸ் I, பிப்ரவரி 14 ஆம் தேதியை புனித வாலெண்டைன் தினமாக அறிவித்தார்.
வரலாற்றில், வாலண்டைன் என்ற பெயரில் பல புனிதர்கள் இருந்தபோதிலும், போப் கெலாசியஸ், யாரைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாக அறியப்படவில்லை.
பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் ஆட்சியின் போது, ரோமில் தியாகம் செய்யப்பட்ட ஒரு துறவியின் நினைவாக இந்த விடுமுறை பெயரிடப்பட்டது, என்று சிலர் நம்புகிறார்கள்.
மற்றவர்கள், ரோமில் தியாகம் செய்யப்பட்ட டெர்னியின் பிஷப்பைக் குறிப்பிடுவதாக நம்புகிறார்கள்.