டெங்குவிலிருந்து உங்களை பாதுகாக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
அண்மைக்காலமாக வடமாநிலங்களில் கனமழையும் மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது சில நாட்களாக தமிழ்நாட்டிலும் பருவமழை தொடங்கியதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் கனமழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் உண்டு. மழை காலங்களில், கொசு உற்பத்தியும் அதிகரிக்கும். அதன் காரணமாக டெங்கு போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சல் என்பது கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று ஆகும். இது சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், உயிரை கொள்ளும் நோயாக மாறக்கூடும். இதை தடுக்க சில வழிகள் இங்கே தரப்பட்டுள்ளன. ஒரு தடுப்பு நடவடிக்கையாக, வெளியில் செல்லும்போது, குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில், பிகாரிடின், டீஇடி அல்லது எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் கொண்ட கொசு விரட்டியைப் பயன்படுத்துங்கள்.
கொசுக்களை அண்டவிடாதீர்கள்
வெளியில் செல்லும் போது, உடலை மூடியபடி, முழு கை சட்டைகள் அல்லது டி-சர்ட்கள், பேன்ட்கள், காலணிகள் மற்றும் சாக்ஸ்களை அணியுங்கள். இரவில் கொசுக் கடியைத் தடுக்க கொசு வலையின் கீழ் தூங்கவும். கொசுக்கள் பெருகும் இடங்களிலிருந்து விலகி இருங்கள் தேங்கி நிற்கும் தண்ணீர் கொசுக்களின் இனப்பெருக்கக் களமாக இருப்பதால், பூந்தொட்டிகள், வாளிகள் மற்றும் தூக்கி எறியப்பட்ட டயர்கள் போன்ற தண்ணீரைச் சேகரித்து வைத்திருக்கும் கொள்கலன்களை தவறாமல் காலி செய்யவும் அல்லது மூடி வைக்கவும். அடிக்கடி தண்ணீர், மூலிகை தேநீர் மற்றும் தெளிவான சூப்கள் போன்ற திரவங்களை நிறைய குடிக்கவும். அதிக காய்ச்சல், தலைவலி, மூட்டு மற்றும் தசை வலி, சொறி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்.