சுற்றுலா: ஜெர்மனியில் கடைபிடிக்க வேண்டிய சில சமூக விதிகள்
ஜெர்மனி நகரம், வளமான கலாச்சார பாரம்பரியம் கொண்டது. மேலும் ஜெர்மனியில் சுற்றுலாவாசியாக செல்லும்போது, உள்ளூர் மக்களுக்கும், அவர்களின் பழக்கவழக்கங்களுக்கும் மரியாதை காட்ட வேண்டும் என எதிர்பார்க்கப்படுவீர்கள். மற்ற எல்லா நாடுகளை போலவே, ஜெர்மனியிலும் சில குறிப்பிட்ட சமூக விதிகள் உண்டு. அறிமுகமில்லாதவர்களுடன் வீண் பேச்சுகளில் ஈடுபடாதீர்கள்: ஜெர்மனி மக்கள், தங்களுடைய தனியுரிமையை மதிப்பவர்கள். அவர்கள் நெருக்கமானவர்களுடன் மட்டுமே வீண் அரட்டைகளில் ஈடுபட விரும்புவார்கள். எனவே, நீங்கள் சகஜமாக அரட்டையடிக்க முயன்றாலும், அது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தின் ஊடுருவலாக கருதப்படும். ஒரு குறிப்பிட்ட காரணம் இல்லாவிட்டால், அந்நியர்களுடன் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. நேரந்தவராமை: ஜெர்மனியர்கள் தங்கள் செயல்திறனுக்காகவும், நேரந்தவராமைகாகவும் அறியப்படுகிறார்கள்.
சைக்கிள் பாதையில் நடந்தால், அபராதம் கட்ட நேரலாம்
தக்க காரணமில்லாமல், தாமதமாக ஒரு இடத்திற்கு செல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால், நீங்கள் யாரையாவது சந்திக்கப் போகிறீர்கள் என்றால், சில நிமிடங்களுக்கு முன்னதாகவே ஆஜர் ஆவது உசிதம். விருந்திற்கு செல்லும்போது பரிசுகள் அவசியம்: ஜெர்மன் கலாச்சாரத்தில், ஒருவரின் வீட்டிற்குச் செல்லும்போது, ஒரு சிறிய பரிசைக் கொண்டு கொண்டு செல்வது வழக்கம். உறவுகளை பேணுவதும், பராமரிப்பதும் ஜெர்மனியர்களுக்கு மிகவும் முக்கியமானது. பரிசுகள் தருவது, உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முயற்சி. நீங்கள் உறவை மதிக்கிறீர்கள் என்பதையும், அதைப் பராமரிக்க முயற்சி செய்யத் தயாராக இருப்பதையும் இது காட்டுகிறது. சைக்கிள் பாதைகளில் நடக்க வேண்டாம்: சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக, தனி சைக்கிள் பாதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் நடப்பது ஜெர்மனியில் போக்குவரத்துக் குற்றமாகும்.