சுற்றுலா: பிரான்சிற்கு சுற்றுலா செல்லும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்
ஒவ்வொரு நாட்டிற்கும், அந்நாட்டிற்கென தனிப்பட்ட சமூக விதிகள் மற்றும் நெறிமுறைகள் உள்ளன. அவை குடிமக்களும் சுற்றுலாப் பயணிகளும் ஒரே மாதிரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நீங்கள் பிரான்ஸ் நாட்டில் சுற்றுலாவிற்கு செல்லும் போது, செய்யக்கூடாத விஷயங்கள் சில இதோ: பிரஞ்சு பேசாமல் இருப்பது: பிரெஞ்சு மக்கள், தங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்தாலும், சுற்றுலாவாசிகள், பிரஞ்சு மொழி பேச முயற்சிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பார்கள். நீங்கள் சரளமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. "Bonjour" (Hello), "Merci" (நன்றி) மற்றும் "Au revoir" (Goodbye) போன்ற சில அடிப்படை சொற்றொடர்களை பேசினாலே போதுமானது.
பிரான்ஸ் நாட்டில், குடிபோதையில் தள்ளாடினால் சட்ட சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது
உணவகங்களில், வெயிட்டரை நோக்கி கை அசைக்க கூடாது: பிரான்சில், நம் நாட்டில் வைட்டரை அழைப்பது போல, கை அசைத்து, அழைக்க கூடாது. அப்படி செய்வது, அவமரியாதை மற்றும் இழிவானதாகக் கருதப்படுகிறது. அதற்கு பதிலாக, உங்கள் கைகளை உயர்த்தினால் போதுமானது. விருந்திற்கு வெறுங்கையுடன் செல்லக்கூடாது: பிரான்சில் உள்ள ஒருவரின் வீட்டிற்கு விருந்திற்கு செல்லும்போது, மது பாட்டில், சாக்லேட்டுகள், பூக்கள் அல்லது உணவுப் பொருள் போன்ற சிறிய பரிசுகளை கொண்டு செல்வது வழக்கம். வெறித்தனமாக குடித்துவிடாதீர்கள்: பிரெஞ்சு மக்கள், குடிபோதையில் தள்ளாடுவதை வெறுப்பவர்கள். அது ஒருவரின் முதிர்ச்சியின்மையை, சுயகட்டுப்பாடு இல்லாததை காட்டுவதாக நம்புகிறார்கள். அதோடு, பிரான்ஸ் நாட்டில், பொதுவெளியில் குடிப்பது சட்டவிரோதமானது. நீங்கள் போதையில் தள்ளாடிக்கொண்டோ, இடையூறு விளைவிப்பதாக கருதப்பட்டாலோ, உங்களை கைது செய்யவும் வாய்ப்புள்ளது.