
விரைவில் சமோசா, ஜிலேபி உள்ளிட்ட நொறுக்கு தீனி பேக்கிங்கில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் எனத்தகவல்
செய்தி முன்னோட்டம்
ஆரோக்கியமற்ற உணவுமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சமோசாக்கள், ஜிலேபிகள், பக்கோடாக்கள் மற்றும் பிஸ்கட் போன்ற பிரபலமான நொறுக்கு தீனி வகையறாக்களின் விரைவில் சிகரெட் பாணி சுகாதார எச்சரிக்கைகள் இடம்பெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த எச்சரிக்கைகள் 'இந்த உணவுகளில் அதிக அளவு எண்ணெய், சர்க்கரை மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கிறது' என வாசர்களை எச்சரிக்கும். இவை ஊட்டச்சத்து குறைபாடுகள், வாழ்க்கை முறை நோய்களுடன் நெருக்கமாக தொடர்புடையவை என சுகாதார வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து எடுக்கப்படும் ஒரு சமூக அக்கறை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
முதற்கட்டம்
நாக்பூரில் உள்ள AIIMS-இல் முதற்கட்டமாக தொடக்கம்
இந்த பிரச்சாரம் முதலில் நாக்பூரில் தொடங்கப்படுகிறது. அங்கு அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ் நாக்பூர்) இந்த முயற்சிக்கான முன்னோடி இடமாக செயல்படும். வளாகத்தில் உள்ள கேன்டீன்கள் மற்றும் பொது உணவகங்களில், உணவு கவுண்டர்களுக்கு அருகில் பிரகாசமான, படிக்க எளிதான எச்சரிக்கை பலகைகள் காட்சிப்படுத்தப்படும்.
காரணம்
எதற்காக மத்திய அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது?
இந்தியா வளர்ந்து வரும் சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அதிகரித்து வருவதால், அரசாங்கம் தட்டில் என்ன இருக்கிறது என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு, வறுத்த, பொறித்த மற்றும் சர்க்கரை நிறைந்த சிற்றுண்டிகளை அடிக்கடி உட்கொள்வது ஒரு முக்கிய பங்களிப்பாகும். 2050ஆம் ஆண்டு வாக்கில், 440 மில்லியன் இந்தியர்கள் அதிக எடை அல்லது பருமனாக இருக்கலாம் என்று தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட உலகளாவிய பகுப்பாய்வு மதிப்பிட்டுள்ளது.
விழிப்புணர்வு
இந்திய உணவுகளுக்கான தடை அல்ல, சிறந்த விழிப்புணர்வு பிரச்சாரம்
பிரபலமான உணவுக் கடைகளுக்கு அருகில் எச்சரிக்கை சுவரொட்டிகள் சர்க்கரை, கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பு உள்ளடக்கம் பற்றிய தெளிவான தகவல்கள். அடிக்கடி உட்கொள்வதால் ஏற்படும் நீண்டகால உடல்நல அபாயங்களை கோடிட்டுக் காட்டும். இந்த எச்சரிக்கைகள் சிகரெட் பேக்கேஜிங்கில் உள்ள எச்சரிக்கைகளைப் போலவே நேரடியாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை கட்டுப்பாடுகளை அல்ல என்றும், மிதமான தன்மையை ஊக்குவிப்பதே இதன் குறிக்கோள் என்றும் அரசு கூறுகிறது. எச்சரிக்கை-லேபிள் பிரச்சாரம் வரும் மாதங்களில் மற்ற நகரங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, உமக்கள் அதிக கவனத்துடன் உணவுத் தேர்வுகளைச் செய்ய ஊக்குவிக்கும் என்றும், அதிகமான மக்களை சமச்சீர் உணவு முறைக்கு தள்ளும் என்றும் அதிகாரிகள் நம்புகின்றனர்.