LOADING...
ஜிம் செல்பவர்கள் வே புரோட்டீன் இல்லாமலேயே கட்டுமஸ்தான உடலைப் பெறலாம்; 5 சிறந்த மாற்றுகள்
தசை வளர்ச்சியைத் தூண்டும் 5 சிறந்த மாற்றுகள்

ஜிம் செல்பவர்கள் வே புரோட்டீன் இல்லாமலேயே கட்டுமஸ்தான உடலைப் பெறலாம்; 5 சிறந்த மாற்றுகள்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 22, 2026
02:48 pm

செய்தி முன்னோட்டம்

உடல் கட்டுக்கோப்பிற்கும், தசை வளர்ச்சிக்கும் வே புரோட்டீன் (Whey Protein) எனும் புரதம் ஒரு சிறந்த தேர்வாக இருந்தாலும், அது அனைவருக்கும் ஒத்துப்போவதில்லை. பால் பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை, செரிமானக் கோளாறு, வயிறு உப்பசம் போன்ற காரணங்களால் பலர் இதைப் பயன்படுத்தத் தயங்குகிறார்கள். அதிர்ஷ்டவசமாக, வே புரோட்டீனுக்கு நிகராகச் செயல்படக்கூடிய பல தாவர மற்றும் விலங்கு சார்ந்த புரதச் சத்துக்கள் இன்று நம்மிடம் உள்ளன. அவ்வாறு உள்ள ஐந்து 5 சிறந்த மாற்றுக்களை இதில் பார்க்கலாம்.

பட்டாணி புரதம்

பட்டாணி புரதம் - சைவ பிரியர்களின் முதல் சாய்ஸ்

தாவர வகை புரதங்களில் பட்டாணி புரதம் தற்போது உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மாலிக்குள் இதழில் வெளியான ஆய்வின்படி, பட்டாணி புரதம் தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்க்கான அபாயத்தையும் குறைக்கிறது. இது மிக எளிதில் செரிமானமாகும். மார்பக மற்றும் குடல் புற்றுநோய் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் நிறைந்துள்ளன.

சோயா புரதம்

சோயா புரதம் - முழுமையான புரதச் சத்து

தாவர வகை புரதங்களில் வே புரோட்டீனுக்கு மிக நெருக்கமான மாற்றாகச் சோயா கருதப்படுகிறது. மனித உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்ட ஒரு முழுமையான புரத மூலம் இது. தசை திசுக்களைப் பழுதுபார்க்கவும், ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் இது சிறந்தது.

Advertisement

பிரவுன் ரைஸ்

பிரவுன் ரைஸ் புரதம்

உணவு ஒவ்வாமை அதிகம் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இது வயிற்றில் எவ்வித எரிச்சலையும் ஏற்படுத்தாது. சில அமினோ அமிலங்கள் இதில் குறைவாக இருந்தாலும், இதை மற்ற தாவர புரதங்களுடன் கலந்து பயன்படுத்தும்போது வே புரோட்டீனுக்கு நிகரான சத்துக்களைப் பெறலாம்.

Advertisement

கேசின் புரதம்

கேசின் புரோட்டீன் - மெதுவான செரிமானம்

வே புரோட்டீன் பாலில் இருந்து எடுக்கப்படுவது போலவே, கேசினும் பாலில் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால் இதன் செயல்பாடு மாறுபட்டது. வே புரோட்டீன் மிக வேகமாக ரத்தத்தில் கலக்கும், ஆனால் கேசின் மிக மெதுவாகச் செரிமானமாகும். இரவு தூங்குவதற்கு முன் இதை எடுத்துக் கொண்டால், நீங்கள் தூங்கும் போது உங்கள் தசைகள் மெதுவாகப் பழுதுபார்க்கப்பட்டு தசை இழப்பு தடுக்கப்படும்.

முட்டை

முட்டை வெள்ளை கரு புரதம்

பால் ஒவ்வாமை இருப்பவர்கள், ஆனால் அசைவ உணவுகளை விரும்புபவர்கள் இதைப் பயன்படுத்தலாம். முட்டை வெள்ளை கருவில் உள்ள புரதம் மிக உயர்ந்த தரம் வாய்ந்தது. கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் மிகக் குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது கச்சிதமாகப் பொருந்தும்.

தேர்வு

சரியான புரோட்டீனை எப்படித் தேர்ந்தெடுப்பது?

உங்கள் இலக்கு என்ன என்பதைப் பொறுத்து தேர்வு செய்ய வேண்டும். தசை வளர்ச்சி உடனடியாக வேண்டுமென்றால் வே அல்லது சோயா சிறந்தது. இரவு நேரப் பராமரிப்பிற்கு கேசின் சிறந்தது. செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் பட்டாணி அல்லது அரிசி புரதத்தைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் வாங்கும் புரோட்டீன் பவுடரில் அதிகப்படியான சர்க்கரை, செயற்கை சுவையூட்டிகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Advertisement