
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள தினசரி இளநீர் பருகுங்கள்
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இதை தடுக்க உங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுங்கள்.
அதோடு வியர்வையினால் வெளியேறும் சத்துக்களை மீண்டும் உடலுக்குள் செலுத்த மறவாதீர்கள்.
அதெப்படி ஊட்டச்சத்தை உடலுக்குள் செலுத்துவது என யோசிப்பவர்களுக்கென்ற தெருவோரங்களில் கிடைக்கிறது அருமருந்து- இளநீர்.
அதில் நிரம்பியுள்ள சத்துகள் உடலில் உள்ள பாகங்களை புத்துணர்ச்சியுடன் இயங்க செய்யும்.
இளநீரின் முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இதில் சோடியம், கால்சியம், குளுகோஸ், புரதம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
இளநீர்
இளநீரின் நன்மைகள்
இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். பசியைத் தூண்டும். பித்தத்தைக் குணப்படுத்தும்.
இளநீர் உடல் சூட்டைத் தணித்துக் குளிர்ச்சியைத் தரும்.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.
இளநீர் பருகுவதால், வயிற்று புண்கள் எளிதில் ஆறும், நெஞ்செரிச்சல் அடங்கும்.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிரம்பியுள்ளது இளநீரில். அதனால், சருமம் பொலிவடையும்.
சிறுநீரக வியாதிகளை தடுக்க உதவுகிறது. சிறுநீரக கற்களை நீக்கவும் உதவுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
ரத்த சுத்தீகரிப்பிற்கு உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்க ஏற்ற பானம்.