தினசரி பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? இன்றே துவங்குங்கள்!
பூண்டு, நறுமணத்திற்கும், சுவைக்கும் மட்டுமே சேர்க்கப்படும் ஒரு உணவு பொருள் என்று நீங்கள் நினைத்திருந்தால், அது தவறு. அதற்கு மேலும், பூண்டில் உள்ள சத்து மற்றும் மருத்துவ குணங்களால் பல நோய்களில் இருந்து உங்களை காப்பாற்ற முடியும். இது மருத்துவரீதியாகும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெறும் வயிற்றில் தினசரி பூண்டு சாப்பிடுவது பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
பூண்டின் நன்மைகள் #1
இரத்த அழுத்தம் கட்டுப்படும்: நாள்தோறும் 2 பல் பூண்டு காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், இரத்த அழுத்தம் கட்டுப்படும். பூண்டில் உள்ள தனித்துவமான பொருட்கள், நரம்புகளை சீராக செயல்படுத்தி இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகின்றன. வயிற்று பிரச்சனைகள் தீரும்: பூண்டில் உள்ள ஆன்டி-ஃபலக்மடரி மற்றும் ஆன்டி-ஆக்சிடண்ட் குணங்கள், கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்திற்கு மிகச்சிறந்த உதவிகளை அளிக்கின்றன. இதனால் உணவு செரிமானம் சிறப்பாக நடைபெறும், அஜீரணமும் நீங்கும். மன அழுத்தம் குறையும்: பச்சை பூண்டு, மன அழுத்தத்தை (ஸ்டிரஸ்) குறைக்கும் உதவிகரமான குணங்களை கொண்டுள்ளது.
பூண்டின் நன்மைகள் #2
இதய நோய்கள் தடுப்பது: பூண்டின் மூலப்பொருட்கள், இருதய சுவர்களை வலுப்படுத்தி, இதய நோய்களை வராமல் தடுக்க இது உதவுகிறது. உடலை சுத்திகரிக்கும்: உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் புழுக்களை வெளியேற்றி, உங்கள் உடலை சுத்திகரிக்க உதவும் சுவாச பிரச்சினைகள் தீரும்: பூண்டில் உள்ள வேதியியல் மூலப்பொருட்கள், காச நோய், நிமோனியா, ஆஸ்துமா, மற்றும் நெஞ்சு சளி போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வந்தால், சுவாச பிரச்சினைகள் அதிகளவில் குணமாகும்.