நம் வாழ்வை மாற்றக்கூடிய சில ஆயுர்வேத பழக்கவழக்கங்கள்
இந்தியாவில் பல லட்சம் மக்களால் பின்பற்றப்படும் ஒரு மருத்துவ முறையாக ஆயுர்வேதம் இருந்து வருகிறது. 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆயுர்வேத மருத்துவமுறை பின்பற்றப்பட்டு வருவதாக ஆயுர்வேதத்தைப் பின்பற்றுபவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இன்றும் ஆயுர்வேத குறிப்புகளின்படி சில செயல்முறைகளை இந்தியர்கள் பலர் தங்களுடைய தினசரி நடவடிக்கையாகக் கடைப்பிடிக்கிறார்கள். அப்படிப் பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் சில ஆயுர்வேத நடவடிக்களைப் பார்க்கலாம். தினசரி காலை எழுந்தது நாம் முதல் வேலையாக பற்களை சுத்தம் செய்வோம். அதன் பொருட்டு ஆயுர்வேத முறையில் ஆயில் புல்லிங் கடைப்பிடிக்கப்படுகிறது. சிறிதளவு கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணைய்யை எடுத்து வாயில் இட்டு 10 முதல் 15 நிமிடம் வரை கொப்பளித்து உமிழ்வதையே ஆயில் புல்லிங் எனக் குறிப்பிடுகிறார்கள். இது பற்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
இன்றும் கடைப்பிடிக்கப்படும் ஆயுர்வேத நடவடிக்கைகள்:
காலை எழுந்தவுடன் பற்களை சுத்தம் செய்த பின்பு வெறும் வயிற்றில் நெய்யை எடுத்துக்கொள்வது. இது நம் வயிற்றில் உள்ள அசுத்தங்களை சுத்தம் செய்வதோடு, சருமம் மற்றும் முடி பளபளப்பாக இருப்பதற்கும் நன்கு வளர்வதற்கும் உதவி செய்யும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், இரவில் உறங்குதற்கு முன்பு திரிபலா எடுத்துக் கொள்வது ஆயுர்வேத முறையி்ல பரிசீலிக்கப்படுகிறது. இதுவும் வயிற்றில் உள்ள அசுத்தங்களை சுத்தம் செய்வதோடு, உடல் எடை குறைதல் உள்ளிட்ட பல நன்மைகளைக் கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆயுர்வேத வாழ்க்கை முறையின்படி கபக் காலத் தொடக்கத்திற்கு முன், அதானது இரவு 10 மணிக்கும் முன் தூக்குவது ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், இரவு 8 மணிக்குள் உணவை உண்பதை முடித்துக் கொள்வதும் பரிசீலனை செய்யப்படுகிறது.