LOADING...
பிரேசில் திருமணங்களில் நடக்கும் 5 தனித்துவமான பழக்கவழக்கங்கள் தெரியுமா?
இந்த விழாக்களில் பழங்குடி மக்களுடைய, ஆப்பிரிக்க மக்களுடைய, ஐரோப்பிய மக்களுடைய வழக்கங்கள் கலந்திருக்கும் (pc: https://www.wpja.com/)

பிரேசில் திருமணங்களில் நடக்கும் 5 தனித்துவமான பழக்கவழக்கங்கள் தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2026
06:52 pm

செய்தி முன்னோட்டம்

பிரேசில் திருமணங்களில் நிறைய கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் இருக்கும். அதனாலேயே அவை மிகவும் தனித்துவமானவை, மறக்க முடியாதவையாக கருதப்படுகிறது. இந்த விழாக்களில் பழங்குடி மக்களுடைய, ஆப்பிரிக்க மக்களுடைய, ஐரோப்பிய மக்களுடைய வழக்கங்கள் கலந்திருக்கும். இது ஒரு அழகான கலாச்சாரத்தை காட்டும். வண்ண வண்ண உடைகள், வேகமான இசை, நடனம் என அனைத்தும் இருக்கும். பிரேசில் திருமணங்கள், அன்பை அவர்களுக்கே உரிய தனி பாணியில கொண்டாடி மகிழ்கின்றனர். பிரேசில் திருமணங்களில் வித்தியாசமாக இருக்கும் ஐந்து முக்கியமான பழக்கவழக்கங்களை இங்கே பார்க்கலாம்.

உடை

மணப்பெண்ணின் வண்ணமயமான உடை

உலகம் முழுக்க பல இடங்களில் வெள்ளை நிற திருமண உடை அணிவது வழக்கம். ஆனால், பிரேசில் மணப்பெண்கள் பெரும்பாலும் பல வண்ணங்கள் அடங்கிய உடைகளை தேர்வு செய்வர். இந்த நிறங்கள் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் காட்டுகிறது. சில பகுதிகளில், அங்குள்ள வழக்கப்படி மணப்பெண்கள் சிவப்பு அல்லது நீல நிற ஆடைகளை அணிவது வழக்கம். இந்த வண்ண உடை, அவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்தையும் கலாச்சாரத்தையும் காட்டும். இது ஒவ்வொரு திருமணத்தையும் ஒரு அழகிய காட்சியாக மாற்றுகிறது.

இசை மற்றும் நடனம்

சாம்பா இசை மற்றும் நடனம்

சாம்பா இசை, நடனம் - இது பிரேசில் கலாச்சாரத்துக்கும் திருமணங்களுக்கும் மிகவும் முக்கியம். கல்யாணம் செய்பவர்கள் தங்கள் விழாக்களிலும், வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் சாம்பாவை சேர்ப்பது வழக்கம். இந்த நிகழ்வில் விருந்தினர்கள் அனைவரும் ஒன்று கூடி நடனமாடி கொண்டாடு மகிழ்வர். அந்த வேகமான இசை, ஒரு துள்ளலான சூழலை உருவாக்கும். இது எல்லோரையும் மகிழ்வுடன் நடனமாட செய்யும். சாம்பா நடன நிகழ்ச்சிகள் கல்யாண நிகழ்வில் மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கும். திறமையான நடனக்காரர்கள் தங்கள் வேகமான அசைவுகளால் எல்லோரையும் மகிழ்விப்பர்.

Advertisement

வேலைகள்

மாப்பிள்ளை தோழர்களின் தனித்துவமான வேலைகள்

பிரேசிலில், மாப்பிள்ளை தோழர்களுக்கு என சில குறிப்பிட்ட வேலைகள் உண்டு. இந்திய திருமணங்களை போல் அவர் உடன் வருவதற்கு மட்டும் அல்ல. திருமணத்திற்கு முன் நடக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய அல்லது திருமணம் நாள் அன்று வேலைகளை ஒழுங்குபடுத்த அவர்களின் பங்கு அவசியம். சில நேரம், மாப்பிள்ளை தோழர்கள் வரவேற்பு நிகழ்ச்சியின் போது நடனம் அல்லது சின்ன நாடகங்கள் போடுவது வழக்கம். அவர்களின் பங்கு, அங்க கூடியுள்ள அனைவருக்கும் இடையே நல்ல நட்பையும், நல்ல பொழுதுபோக்கையும் கொடுக்கும்.

Advertisement

கேக்குகள்

பிரம்மாண்டமான திருமண கேக்குகள்

பிரேசில் திருமண கேக்குகள் பெரிதாகவும், அழகான வேலைப்பாடுகளோடும் இருக்கும். இந்த கேக்குகள் பல அடுக்கு உயரத்தில் தயாரிக்கப்படும். மணமக்களுடைய தனிப்பட்ட விருப்பத்தையும், திருமணத்தின் முக்கிய கருத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அழகிய வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்படும் இந்த கேக். பல வகை சுவைகளில் கேக் தயாரிக்கப்படும். பெரும்பாலும், தேங்காய் அல்லது கொய்யாப்பழ இனிப்பு (கோயாபாடா) போன்ற பிரேசில் பாரம்பரிய பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும். கேக் வெட்டும் போது, விருந்தினர்கள் ஆரவாரம் செய்து மகிழ்வது வழக்கம்.

பூக்கள்

உள்ளூர் பூக்களால் செய்யப்பட்ட பூங்கொத்துகள்

பிரேசில் திருமணங்களில் பூங்கொத்துக்களில், அந்தந்த ஊர்களில் கிடைக்கும் பூக்களையே பயன்படுத்துவார்கள். இவை அழகாகவும், ஒரு முக்கியமான அர்த்தத்தோடும் இருக்கும். ஆர்க்கிட் அல்லது செம்பருத்தி போன்ற வெப்பமான பகுதிகள்ல வளரும் பூக்கள், அதனுடைய அழகான நிறங்களுக்காகவும், நல்ல வாசனைகளுக்காகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் இந்த பூங்கொத்துகள் மணப்பெண்ணை மேலும் அழகாக்கும். அதோட, பிரேசிலோட இயற்கைக்கும் பெருமை சேர்க்கும்.

Advertisement