பயண டிப்ஸ்: வாழ்நாள் அனுபவத்தை தரும் 5 ஆடம்பரமான ரயில் பயணங்கள்
விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு, வெளியூர்களுக்கு அல்லது சொகுசு ஹோட்டல்களுக்கு செல்லலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? ஒரு சேஞ்சிற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்யுங்களேன். ரயில் பயணத்தில் அப்படி என்ன இருக்கிறது என யோசிக்கிறீர்களா? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஃபிளைட்டில் இருப்பது போல பிசினஸ் கிளாஸ் இருக்கையின் வசதியையும், அது மட்டுமின்றி, ஸ்பா, உணவகம் போன்றவற்றுடன், உங்கள் ஊருக்கு அழைத்துச் செல்லும் ரயிலில் பயணிக்க நேர்ந்தால்? உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு ராஜா மரியாதையுடன் பயணிக்க கூடிய சொகுசு ரயில்களும் உலகில் உள்ளது. அவற்றை பற்றி ஒரு சிறு தொகுப்பு.
சுகமான ரயில் பயணம் போலாமா?
பேலஸ் ஆன் வீல்ஸ்: ஒரு காலத்தில் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் ராஜ்புதானா, குஜராத் மற்றும் பிற சமஸ்தானங்களின் அரச போக்குவரத்து வாகனமாக பயன்படுத்தப்பட்டது இந்த பேலஸ் ஆன் வீல்ஸ். இது ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் பாரம்பரிய சொகுசு ரயில் ஆகும். வெனிஸ் சிம்ப்ளான்-ஓரியண்ட்-எக்ஸ்பிரஸ்: வெனிஸ் சிம்ப்ளான்-ஓரியண்ட்-எக்ஸ்பிரஸ் பிரபலமான ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் நவீன பதிப்பு போன்றது. இது உலகளவில் அற்புதமான ரயில்களில் ஒன்றாகும். இது உங்களை கவர்ச்சியான 1920களின் பயணத்தின் பொற்காலத்திற்கு அழைத்துச் செல்லும்.
மேலும் சில சொகுசு ரயில்கள்
கியூஷுவில் செவென் ஸ்டார்ஸ்: இது ஜப்பானின் முதன்மையான சொகுசு ஸ்லீப்பர் ரயில் ஆகும். இது கியூஷு தீவின் இயற்கை எழில் சூழ்ந்த நிலப்பரப்புகளில் இணையற்ற பயண அனுபவத்தை வழங்குகிறது. ராயல் ஸ்காட்ஸ்மேன்: ராயல் ஸ்காட்ஸ்மேன் சொகுசு ரயில் பயணத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஸ்காட்லாந்தின் மயக்கும் நிலப்பரப்புகளின் மத்தியில் இணையற்ற பயணத்தை வழங்குகிறது. தி ப்ளூ ட்ரைன்: ப்ளூ ட்ரைன் என்பது தென்னாப்பிரிக்காவில் இயங்கும் ஒரு சொகுசு ரயில் சேவையாகும். இந்த ரயில் பல்வேறு வழித்தடங்களை வழங்குகிறது, பொதுவாக பிரிட்டோரியா மற்றும் கேப் டவுன் இடையே பயணிக்கிறது, மற்ற இடங்களுக்கும் அவ்வப்போது பயணிக்கிறது.