கட்டாயம் சேர்த்து சாப்பிட கூடாத 5 உணவு வகைகள்
நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில், பல உணவுகளை சேர்த்து சாப்பிடுகிறோம். ஆனால் அவை அனைத்தும் நம் உடம்பிற்கு நன்மை மட்டும் பயக்கவில்லை. ஊட்டச்சத்து நிபுணர்கள் நாம் சேர்த்து சாப்பிடும் பல உணவுகள் மூலம் நன்மை மட்டுமல்லாது, தீமையும் நம் உடம்பிற்கு விளையும் என கூறுகிறார்கள். அந்த வகையில் நீங்கள் கட்டாயம் சேர்த்து சாப்பிடக்கூடாத 5 உணவு வகைகளை இங்கு பார்க்கலாம். உணவுடன் பழங்கள்- நாம் பெரும்பாலும் உணவு உண்ணும் போது, இனிப்பு சுவைக்காக பழங்களை சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் அப்படி சாப்பிடக்கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். பழங்களையும் உணவையும் ஒன்றாக சாப்பிடும்போது செரிமான பிரச்சனை ஏற்படும். மேலும் பழங்கள் மற்றும் உணவு சாப்பிடும் போது குறிப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.
சேர்த்து சாப்பிடக்கூடாத உணவு வகைகள்-2
கொழுப்பு இறைச்சி மற்றும் சீஸ்- கொழுப்பு இறைச்சி மற்றும் சீஸை நாம் சேர்த்து உட்கொள்ளும் போது, நம் உடம்பில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் அளவுகள் அதிகரிக்கின்றன. இது நம் ஒட்டுமொத்த உடல் நிலையும் பாதித்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகளையும் அதிகப்படுத்துகிறது. நீங்கள் சமநிலையான உணவுகளை உட்கொள்ள குறைந்த கொழுப்பு உடைய இறைச்சி மற்றும் குறைந்த கொழுப்புள்ள சீஸை உட்கொள்ள வேண்டும். பாலுடன் சிட்ரஸ் பழங்கள்- ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்கள் சிட்ரஸ் அமிலம் கொண்டவை. அவற்றை நாம் பாலுடன் சேர்த்து சாப்பிடும்போது செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, பால் மற்றும் சிட்ரஸ் பழங்களை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு சாப்பிடுவது நல்லது.
சேர்த்து சாப்பிடக்கூடாத உணவு வகைகள்-3
இரும்பும் கால்சியமும்- இரும்புச்சத்தும், கால்சியம் சத்தும் நம் உடம்பிற்கு முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். ஆனால் அவற்றை சேர்த்து சாப்பிடும்போது நம் உடலால் அவை இரண்டையும் ஒரே சமயத்தில் கிரகித்துக் கொள்ளமுடியாது. அதேசமயம், இரும்புச்சத்தின் பலன்களை முழுமையாக அடைய நீங்கள் விட்டமின் டி அல்லது விட்டமின் சி உடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. மீனும் பாலும்- மீனையும் பாலையும் சேர்த்து சாப்பிடக்கூடாது என, நம் வீட்டில் பெரியோர்கள் சொல்லி கேட்காத ஆளே இருக்க மாட்டோம். அவர்கள் சொல்வது போல் மீனையும் பாலையும் சேர்த்து சாப்பிடுவது, செரிமான பிரச்சனைக்கு வழி வகுத்து, நம் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.