Page Loader
யூட்யூப் பிரபலம் டிடிஎப் வாசனுக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் 
யூட்யூப் பிரபலம் டிடிஎப் வாசனுக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

யூட்யூப் பிரபலம் டிடிஎப் வாசனுக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் 

எழுதியவர் Venkatalakshmi V
Sep 19, 2023
04:32 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், சாகச பயணம் செய்தபோது, விபத்து ஏற்பட்டு அடிபட்டது. இவரின் மீது ஜாமீனில் வெளிவரமுடியதாக வழக்குகளை பதிந்த காவல்துறையினர், அவரை கைது செய்ய நேற்று முழுவதும் வலை வீசி தேடி வந்தனர். இது பற்றி நேற்றே குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில், இன்று அவரை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்து, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து, டிடிஎப் வாசனை 15 நாட்கள் (அக்டோபர் 3-ம் தேதி வரை) நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார். தற்போது டிடிஎப் வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். TTF வாசன், நேற்று முன்தினம் தனது பைக்கில் சென்னையிலிருந்து, புனே புறப்பட்டு சென்றபோதே இந்த விபத்து நேர்ந்தது.

embed

டிடிஎப் வாசனுக்கு நீதிமன்ற காவல்

#JUSTIN || டி.டி.எஃப் வாசனுக்கு அக்.3ம் தேதி வரை நீதிமன்ற காவல் 15 நாள் சிறையிலடைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவு#TTFVasan | #TTFvasanAccident #ttfvasanarrest pic.twitter.com/3tpxxxVtw9— Thanthi TV (@ThanthiTV) September 19, 2023