எஸ்கேப் ஆன TTF வாசன்; போலீஸ் வலைவீச்சு
யூட்யூப் விடியோக்கள் மூலம் பிரபலம் ஆனவர் TTF வாசன். அவர் தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். பலமுறை, சர்ச்சையான வீடியோக்களினால் அவ்வப்போது போலீஸ் கண்டிப்பிற்கு ஆளான TTF வாசன், நேற்று, காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டி என்ற இடத்தில், பைக்கில் வீலிங் செய்து, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காஞ்சிபுரம் காவல்துறையினர், மனித உயருக்கு ஆபத்துகளை விளைவிப்பது, பிறரின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதித்தனர்.
போலீஸ் கண்காணிப்பிலிருந்து எஸ்கேப் ஆன வாசன்
கைகளிலும், கால்களிலும், கட்டோடு வாசன் இருக்கும் புகைப்படம், காலையில் இணையத்தில் வைரலான நிலையில், தற்போது, அவர் எஸ்கேப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிடிஎஃப் வாசன், காவல்துறையினர் தன் மீது வழக்கு பதிந்துள்ளதை அறிந்ததும், அம்பத்தூரில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்றதாக கூறப்பட்டது. இதனை கேள்விப்பட்ட போலீசார் அவரை கைது செய்ய அங்கே விரைந்துள்ளனர். ஆனால், அங்கே காணப்படவில்லை எனவும், அவர் எங்கு சென்றுள்ளார் என தெரியவில்லை எனவும் அக்கம்பக்கத்தினர் கூறவே, தற்போது காவல்துறையினர் அவரை வலைவீசி தேடிக்கொண்டிருக்கின்றனர்.