Page Loader
அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு 
அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு

அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு 

எழுதியவர் Nivetha P
Dec 01, 2023
05:25 pm

செய்தி முன்னோட்டம்

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த கௌதம் குமார்(26), எம்.ஏ. எம்.ஃபில் முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியர் பணியாற்றி வந்துள்ளார். சுமார் ஒருவருட காலமாக இவர் திருமணம் செய்ய பெண் தேடியும் அமையவில்லையாம். இதனிடையே இவர் அரசு பணி பெறுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பீகார் அரசு தேர்வாணைய தேர்வு எழுதிய இவர், அதில் தேர்வுப்பெற்றுள்ளார். ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் பணியும் இவருக்கு கிடைத்துள்ளது. அதற்கான பணிநியமன ஆணையினை வாங்கி வருவதாக தனது பெற்றோரிடம் மகிழ்ச்சியுடன் கூறிவிட்டு கடந்த புதன்கிழமை சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை, அவரது மொபைல் போனும் அணைக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது பெற்றோர் அச்சமுற்று காவல்துறையில் புகாரளித்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினரும் அவரை தேடி கண்டுபிடித்துள்ளனர்.

திருமணம் 

கட்டாய திருமணம் என்னும் பிரிவில் வழக்குப்பதிவு

காவல்துறையினர் அவரை பார்த்தப்பொழுது திருமண கோலத்தில் இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அவரிடம் விசாரிக்கையில், தன்னை பெண்ணின் தந்தை துப்பாக்கி முனையில் வைத்து கட்டாயப்படுத்தி தாலி கட்ட சொல்லியதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் பெண்னின் தந்தையான ராகேஷ் ராயிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர், தனது மகளுக்கு ஒரு அரசு பணியில் இருக்கும் மாப்பிள்ளையை கட்டி வைக்க வேண்டும் என்று சிறுவயது முதலே ஆசைப்பட்டதாகவும், எனவே கௌதம் குமாரை கடத்தி வந்து துப்பாக்கி முனையில் வைத்து தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது கட்டாய திருமணம் என்னும் பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, இந்த திருமணம் செல்லுமா இல்லையா? என்பதை நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்று கூறியுள்ளது.