தியா குமாரி: ராஜஸ்தான் அரசியலில் மற்றுமொரு ராஜவம்சம்
செய்தி முன்னோட்டம்
பாரதிய ஜனதா கட்சி (BJP) ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக முதல் முறையாக எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை பாஜக நேற்று அறிவித்தது.
வரும் டிசம்பர் 15 ஆம் தேதி அவர் பதவி ஏற்கவுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
மேலும் துணை முதல்வராக தியா குமாரி மற்றும் பிரேம்சந்த் பைர்வா ஆகியோரை தேர்வு செய்தது, பாஜக.
முதல்வராக சர்மாவின் பெயர் அறிவிக்கப்பட்டதே பலருக்கும் ஆச்சரியமாக இருந்த நிலையில், தியா குமாரியின் தேர்வு யாருமே எதிர்பாராதது.
ஏனெனில் அவர் முதல்வர் பதவிக்கான முன்னணி போட்டியாளராக இருந்தார்.
அரசியலுக்காக அரண்மனையின் ஆடம்பரத்தைத் தவிர்த்து, ராஜஸ்தான் அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகவும் அவர் கருதப்படுகிறார்.
card 2
தியா குமாரியின் கல்வி, அரச பின்னணி
ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி தியா குமாரி, ஜெய்ப்பூரின் கடைசி ஆளும் மகாராஜா இரண்டாம் மான் சிங்கின் பேத்தி ஆவார்.
அவரது தந்தை, சவாய் பவானி சிங், இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக இருந்தார்.
அவர் 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் 10வது பாராசூட் படைப்பிரிவின் பாரா கமாண்டோக்களை வழிநடத்தி சிறப்புப் பதக்கங்களை பெற்றார்.
தியா குமாரி லண்டனில் நுண்கலை மற்றும் வடிவமைப்பு திறன்களில் டிப்ளமோ பட்டம் பெற்றவர்.
அரசியலைத் தவிர, குமாரி பல ஆண்டுகளாக சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக அவர் "ஜெய்ப்பூர் மகள்" என்று அன்பாக அழைக்கப்படுகிறார்.
அவர் ராஜஸ்தானின் கண்தான அமைப்பு மற்றும் எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ரேஸ் போன்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஈடுபட்டுள்ளார்
card 3
பாஜக மற்றும் ராஜஸ்தான் அரசியலில் தியா குமாரி
தியா குமாரி, 2013இல் பாஜகவில் சேர்ந்தார். முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தான் இவரின் அரசியல் பிரவேசத்திற்கு முக்கிய பங்கு வகித்தவர்.
அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கலந்து கொண்ட பேரணியில் அவர் பாஜக அணியில் சேர்ந்தார்.
அதன்பிறகு, அவர் தனது முதல் தேர்தலின் போது சவாய் மாதோபூர் சட்டமன்றத் தொகுதியில், அனுபவமிக்க அரசியல் எதிரிகள் பலரையும் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
2019 மக்களவைத் தேர்தலில் ராஜ்சமந்த் தொகுதியில் 5.51 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சமீபத்தில் நடந்த தேர்தல்களில் வித்யாதர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.