புழல் சிறையில் புத்தக கண்காட்சி - திறந்து வைத்த கவிஞர் வைரமுத்து!
சென்னை புழல் மத்திய சிறையில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து, கைதிகளுக்கு அறிவுரை வழங்கினார் கவிஞர் வைரமுத்து. தமிழகத்தில் 9 இடங்களில் மத்திய சிறைகள் செயல்படுகின்றன. கைதிகளின் மன அழுத்தத்தை போக்கவும், நல்வழிப்படுத்தவும் புத்தகத்தை வழங்க புதிய டிஜிபி அம்ரேஸ் புஜாரி முடிவு செய்தார். இந்த நிலையில், புத்தக கண்காட்சி அமைத்து சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் பலனாக பல அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் அனைவரும் புத்தகங்களை வழங்கினார்கள். இதனால், 34, 232 புத்தகங்கள் சிறை நூலகங்களுக்கு தானமாக கிடைக்கப்பெற்றது.
புழல் மத்திய சிறையில் புத்தக கண்காட்சி தொடக்கம் - கவிஞர் வைரமுத்து பங்கேற்பு
அவை தலைப்பு வாரியாக பிரிக்கப்பட்டு தமிழகம் முழுவது உள்ள சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, உலக புத்தக தினத்தில் மத்திய சிறை 1 இல் புத்தக கண்காட்சி திருவிழா நடைப்பெற்றது. வைரமுத்து கலந்துகொண்டு பேசுகையில், நெல்சன் மண்டேலா, நேரு மற்றும் காந்தி என பலர் தலைவர்களாகி சிறைக்கு வந்தார்கள். நீங்கள் தலைவர்களாகி சிறைக்கு வெளியே செல்லுங்கள். தமிழ் சிந்தனையை உங்கள் மனதில் விதைத்துள்ளேன். நீங்கள் மரமாக வளர்வீர்கள் என்று நம்புகிறேன். எனவே சிறைவாசிகளிடம் பேசியது மகிழ்ச்சியை தருகிறது எனத்தெரிவித்துள்ளார். இந்த விழாவில் சிறைத்துறை துணைத்தலைவர் கனகராஜ், முருகேசன் மற்றும் தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி கலந்துகொண்டனர்.