Page Loader
ஜூலை 24 முதல் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்: சென்னை மேயர் பிரியா 
ஜூலை 24 முதல் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்

ஜூலை 24 முதல் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்: சென்னை மேயர் பிரியா 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 14, 2023
09:56 am

செய்தி முன்னோட்டம்

பெண்களுக்கான உரிமை தொகையை மாதந்தோறும் வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. முன்னாள் முதலைமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான அரசாணை சென்ற வாரம் பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த வாரம், இதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது அரசு. அதன்படி, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும், இதற்காக தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, வீடு தோறும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்றவற்றின் தகவலும், உங்கள் கைபேசி எண்ணும் பெறப்படும் எனவும், அதுமட்டுமின்றி, கை ரேகையும் கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டது.

card 2

ஜூலை 24 முதல் விண்ணப்பங்கள்

இதனிடையே, சென்னை மாநகராட்சியில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மேயர் பிரியா கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக விண்ணப்பங்களை பெற, 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறும் எனக்கூறினார். இதற்காக, சென்னையில் மட்டுமே 3,200 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை பகுதியில் உள்ள 1415 ரேஷன் கடைகள் மூலமாக, தகுதியான குடும்ப தலைவிகள் கண்டறியப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு உதவ, 500 நபருக்கு, ஒருவர் வீதம் மாநகராட்சி சார்பில் தன்னார்வலர்கள் ஒதுக்கப்படுவார்கள் என மேயர் பிரியா கூறினார்.