
அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி - சேலத்தில் நடந்த சோக சம்பவம்!
செய்தி முன்னோட்டம்
சேலத்தில் இளம்பெண் ஒருவர் படிக்கட்டில் பயணம் செய்யும்போது சாலை வளைவில் பேருந்து திரும்புகையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வெண்ணந்தூரை சேர்ந்த கெளசல்யா என்ற பெண், கார்மெண்ட்ஸில் வேலை செய்துவிட்டு வீடு திரும்ப பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்றுள்ளார். இதனிடையே, சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே, சந்திரா திரையரங்கம் சாலை வளைவில் பேருந்து வேகமாக திரும்பியுள்ளது.
அப்போது கைத்தவறி கீழே விழுந்த அப்பெண் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனால் விசாரணையை மேற்கொண்ட போலீசார் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மேல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் பேருந்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NewsUpdate | பேருந்து படிக்கட்டில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!#SunNews | #Salem | #BusAccident pic.twitter.com/irdjldquaA
— Sun News (@sunnewstamil) May 4, 2023