தமிழக அரசியலில் புதிய சரித்திரம்! NTR-இன் சாதனையை முறியடிப்பாரா விஜய்?
செய்தி முன்னோட்டம்
ஆந்திர அரசியலில் 1983-ஆம் ஆண்டு என்.டி. ராமாராவ் (NTR) தனது 'தெலுங்கு தேசம்' கட்சியை தொடங்கிய 9 மாதங்களிலேயே ஆட்சியைப் பிடித்து மாபெரும் சாதனை படைத்தார். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகம்(TVK) முன்னிலை வகித்து வரும் போக்குகள், என்.டி.ஆர்-இன் அந்த வரலாற்றுச் சாதனையை நடிகர் விஜய் முறியடிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 110 இடங்களில் TVK முன்னிலையில் உள்ளது.
ஒப்பீடு
NTR vs விஜய்: ஒரு ஒப்பீடு
NTR - 294 இடங்களில் 201 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தார். (46.08%) விஜய்- தற்போதைய நிலவரப்படி 243 தொகுதிகளில் 110 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையை நோக்கி முன்னேறி வருகிறார். (46.58%). இதற்கு முன்னர் சினிமா துறையிலிருந்து அரசியலில் களம் கண்ட MGR (30.04%), விஜயகாந்த்தின் தேமுதிக (8.5%), கமல்ஹாசன் ம.நீ.ம (2.6%) மட்டுமே பெற்றிருந்தனர். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக - அதிமுக என்ற இரு துருவ அரசியலாக இருந்த தமிழ்நாட்டில், முதல் முறையே ஒரு புதிய கட்சி இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது இதுவே முதல் முறை. கொளத்தூர் தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்து, TVK வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.