ராகுல் காந்தி வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குமா சூரத் நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
தனது சிறைத் தண்டனைக்கு தடை அறிவிக்க கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்திருந்த மனு மீதான தீர்ப்பை இன்று(ஏப்-20) குஜராத்தின் சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் அறிவிக்க வாய்ப்புள்ளது.
மோடியின் குடும்பப்பெயர் பற்றி பேசியதற்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை தடை செய்ய கோரி ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதற்கு சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்படுகிறது.
ராகுல் காந்தியின் தண்டனை தடை செய்யப்பட்டால், அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார்.
details
ஒரு மாதம் வரை மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கிய நீதிமன்றம்
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கடந்த மாதம் லோக்சபா எம்பி பதவியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த வியாழன் அன்று, கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஆர்.பி.மொகேரா, காந்தியின் தண்டனைக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கடந்த மார்ச் 23ஆம் தேதி குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம், அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீர்ப்பு வெளியான நாளிலிருந்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்செய்யப்பட்டார்.
நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி, ஒரு மாதம் வரை மேல்முறையீடு செய்ய அனுமதித்தது.