வரலாற்று நிகழ்வு: ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான காரணம் என்ன?
வரலாற்று நிகழ்வு: முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான இன்று(ஆகஸ்ட் 20) அவர் எப்படி, எதனால் படுகொலை செய்யப்பட்டார் என்பதை தெரிந்துகொள்வோம். 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கலந்து கொண்டார். அப்போது, அவரது காலில் விழுந்து வணங்குவது போல் அவர் அருகில் வந்த தனு என்ற பெண் தற்கொலை குண்டுதாரி, வெடிகுண்டை வெடிக்க செய்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தார். இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 1980களின் பிற்பகுதிகளில் இலங்கையின் தமிழீழ விடுதலை புலிகள்(LTTE) மிக தீவிரமாக செயல்பட்டு வந்தது.
LTTEயை கலைப்பது ராஜீவ்-காந்தியின் முக்கிய குறிக்கோளாக இருந்ததது
அப்போது, தீவிரவாத அமைப்பாக கருதப்பட்ட LTTEயை கலைப்பதுதான் ராஜீவ்-காந்தியின் முக்கிய குறிக்கோளாக இருந்ததது. அவர் பிரதமராக இருந்த போது, LTTEக்கு எதிராக இந்திய அமைதி காக்கும் படை(IPKF) என்பது உருவாக்கப்பட்டது. இலங்கை உள்நாட்டுப் போரில் அமைதியை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த படை உருக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் LTTE இயக்கத்திற்கு முற்றிலுமாக உடன்பாடு இல்லை. இதற்கிடையில், 1991ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பொது தேர்தலில் தான் வெற்றி பெற்றால், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை கலைப்பதே தனது நோக்கம் என்று ராஜீவ்-காந்தி ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த காரணத்திற்காகவே LTTE அமைப்பு ராஜீவ்-காந்தியை படுகொலை செய்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.