Page Loader
"ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை திணிக்க வேண்டும்?": முதல்வர் ஸ்டாலின்
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்

"ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை திணிக்க வேண்டும்?": முதல்வர் ஸ்டாலின்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2025
06:47 pm

செய்தி முன்னோட்டம்

கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக குறிப்பிடும் போது, சில ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை தமிழகத்தில் திணிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுக அரசிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. இந்நிலையில், அமைச்சர் P. தியாகராஜன் ஒரு பேட்டியில் மும்மொழி கொள்கை எதற்காக மாநிலத்தில் எதிர்க்கப்படுகிறது என்பதை தெளிவாக விளக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த பேட்டியினை மேற்கோள் காட்டி முதல்வர், 'எக்ஸ்' பதிவில்,"தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கும்போது, ஒரு சில ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை திணிக்க வேண்டும்?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

பேட்டி 

வைரலாகும் அமைச்சர் தியாகராஜனின் பேட்டி

பேட்டியின் போது அமைச்சருடன், "குழந்தைகள் இந்த வயதில் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளும் அளவிற்கு திறமையுடவர்கள். ஏன் மாநில அரசு மும்மொழி கொள்கையை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும்?" எனக்கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர்,"இரு மொழிக் கொள்கை அமல்படுத்தியதன் மூலம், தமிழகம் கல்வியில் மிகச்சிறந்த மாநிலமாக விளங்குகிறது. மும்மொழிக் கொள்கையை பின்பற்றும் மாநிலங்களில் எத்தனை குழந்தைகளுக்கு 3 மொழிகள் தெரியும்? தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இரு மொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை கொண்ட மாநிலங்களில் உள்ள கல்வி முறைகளை விட சிறந்ததாக உள்ளது." என தக்கவகையில் பதில் தந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post